18 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மந்திரங்கள் முழங்க பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

#Temple #spiritual #Lanka4
Kanimoli
1 year ago
18 வருடங்களுக்குப் பிறகு  தமிழில் மந்திரங்கள் முழங்க பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் இன்று தமிழில் மந்திரங்கள் 
முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
18 ஆண்டுகளுக்குப் பிறகு முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக திகழும் பழனியில் இன்று விமர்சையாக குடமுழுக்கு விழா நடைபெற்று வருகிறது, கடந்த 23ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது.

தண்டாயுதபாணி உப கோயில்களான இடும்பன் கோவில்,பாத விநாயகர் கிரிவல பாதையில் உள்ள 5 மயில்கள் உட்பட 83 கோயில்களுக்கு நேற்று குடமுழுக்கு நடந்தது இதைத்தொடர்ந்து இன்று காலை மலைக்கோவில் பிரகாரத்தில் உள்ள ராஜகோபுரம் தங்க விமானம் ஆகியவற்றிற்கு கங்கை, காவிரி உள்ளிட பல்வேறு ஆறுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர்கள் கொண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
குடமுழுக்கு 108 சிவாச்சாரிகள் 108 ஓதுவர்கள் சேர்ந்து பன்னிரு திருமுறைகள் திருப்புகழ் கந்தன் அலங்காரம் என முருக கடவுளை தமிழில் பூஜை செய்தனர்,புனித நீரை கோபுரங்களிலும் தங்க விமானத்திலும் ஊற்றினர் பிறகு பக்தர்கள் மீது ஊற்றப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் துவப்பட்டு அரோகரா என கோஷத்துடன் தரிசனம் செய்தனர் பக்தர்கள்.

கும்பாபிஷேக விழாவிற்கு ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சங்கரபாணி, அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர், பொதுமக்கள் கும்பாபிஷேகத்திற்கு கலந்து கொள்ள பழனி அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் கட்டணம் இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றது. கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மாலை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது