இரட்டை இலை சின்னத்திற்காக உச்ச நீதிமன்றம் செல்லும் எடப்பாடி தரப்பினர்.

#India #Election #Lanka4
Kanimoli
1 year ago
இரட்டை இலை சின்னத்திற்காக உச்ச நீதிமன்றம் செல்லும் எடப்பாடி தரப்பினர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது இந்நிலையில் இரட்டை இலை சின்னத்திற்காக உச்ச நீதிமன்றத்தை  எடப்பாடி தரப்பினர் நாட உள்ளனர். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்  இளங்கோவன் களம் இறங்குகிறார். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் பன்னீர் செல்வம் என இருதரப்பும் போட்டியிட முடிவு செய்துள்ளது.

இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடத்தப்படுகிறது இதை எடுத்து மார்ச் 2 தேதி வாக்கு எண்ணிக்கைகளின் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளனர்.
ஈரோட்டில் முகாமிட்டுள்ள எடப்பாடி தரப்பினர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர் நேற்று முதல் தொடர் ஆலோசனை நடந்து வருகிறது இதையொட்டி ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஈரோட்டிற்கு உடனடியாக வர உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரட்டை இலை சின்னத்திற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்தனர். இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வில் எடப்பாடி தரப்பில் அரிமா சுந்தரம் முறையீடு செய்துள்ளார், இந்த அமர்வில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சார்பில் எங்கள் தரப்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளோம் இடைக்கால பொது செயலாளர் என்ற முறையில் எனது கையெழுத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது என்று கூறினர்,
உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பிற்கு உங்களது கோரிக்கையை தெரிவித்தீர்களா? என்ற கேள்வியை எழுப்பியது அதற்கு தகவலை பகிர்ந்து கொண்டோம் என்ற பழனிசாமி தரப்பினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வரும் 30-ஆம் தேதி முறையீடு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.