சிம்புவுடன் கைகோர்க்க உள்ள ரஜினி பட இயக்குனர்

#Actor #TamilCinema #Cinema #Lanka4
Kanimoli
1 year ago
சிம்புவுடன்  கைகோர்க்க உள்ள ரஜினி பட இயக்குனர்

சிம்பு தொடர் தோல்விக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்திருந்தார். அதன் பிறகு அவரது நடிப்பில் வெளியான படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அவரது சம்பளமும் தற்போது உயற்றப்பட்டுள்ளது. கடைசியாக வெளியான வெந்து தணிந்தது காடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது சிம்பு பத்துதல படத்தை முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் கொரோனா குமார் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் சிம்பு சினிமாவில் பல வருடங்கள் பயணித்தாலும் இன்னும் தன்னுடைய ஐம்பதாவது படத்தை நெருங்கவில்லை. 50வது படம் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சிம்பு செயல்பட்டுள்ளார்.

ஆகையால் சூப்பர் ஸ்டார் பட இயக்குனரை சிம்பு இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு நெல்சன் சிம்புவின் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நெல்சன் சிம்புவுக்கு ஒன் லைன் ஸ்டோரி கூறியுள்ளார்.

இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போக முழு கதையையும் தயார் செய்து வருமாறு கூறியுள்ளாராம். நெல்சன், சிம்பு கூட்டணி இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கா அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் விஜய்யின் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் நெல்சன் மிகுந்த அப்சட்டில் இருந்தார். அதன் பிறகு ரஜினி தனது படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளதால் இந்தப் படத்தை சூப்பர் ஹிட் படமாக ரசிகர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்.

மேலும் இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதால் அடுத்ததாக சிம்புவுக்கு நெல்சன் வலை விரித்துள்ளார். முதல்முறையாக இந்தக் கூட்டணி இணைய உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!