கள ஆய்வில் முதலமைச்சர் என்றும் புதிய திட்டத்தை தொடங்கினார் மு க ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்கள் வேலூர் மண்டலத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என்ற தகவலை தமிழ்நாடு அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மக்களுக்காக தான் அரசு மக்களை மையப்படுத்தி இயங்குவது தான் நல்லரசு,அரசு அலுவலகங்கள்,அரசு மருத்துவமனைகளை நாடிவரும் மக்கள் மனநிறையுடன் திரும்பி செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது தான் அரசின் முக்கிய அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமையாகும்.
அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் 'கள ஆய்வில் முதலமைச்சர்'என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் முக்கிய அமைச்சர்கள்
அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்கள் ஆகியவர்களுடன் மாவட்டங்களுக்கு சென்று நிர்வாகப் பணிகளையும் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும் விரிவாக ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். வரும் பிப்ரவரி 1மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு திட்டங்களை குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்