வாகனப்புகை இல்லாத நாடாக 2070 ஆம் ஆண்டிற்குள் இந்தியா மாற்றப்படும் நிர்மலா சீதாராம் அறிவிப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரளபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம் 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில் 2070ஆம் ஆண்டிற்குள் இந்தியா வாகன புகை இல்லாத நாடாக உருவாகும், மத்திய மாநில அரசுகள் பயன்படுத்தும் பழைய வாகனங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை 11 மணி முதல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம் நாடாளுமன்ற மக்களவை 2023 -2024 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் அதனால் ஏற்பட்ட பயன்கள் குறித்து முதலில் பேசிய அவர் புதிய திட்டங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்படும் நிதியும் அறிவித்து வருகிறார்.
அதிகம் மாசுக்களை ஏற்படுத்தும் பழைய வாகனங்களை மாற்றுவது நாட்டின் பொருளாதாரத்தை எடுத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது மத்திய அரசின் பழைய வாகனங்களை அழிப்பதற்கு கடந்த 2021 - 2022 பட்ஜெட்டில் தேவையான நிதி ஒதுக்கினோம், பழைய வாகனங்கள் மற்றும் பழைய ஆம்புலன்ஸ்களை மாற்றுவதில் மாநில அரசுகளும் பங்காற்றினர் வரும் 2070ஆம் ஆண்டிற்குள் வாகனம் புகையில்லாத நாடாக இந்தியா உருவாகும் என்றார் நிதி அமைச்சர்.
வாகனங்களை மாற்றுவது என்பது நாட்டின் முக்கியமான கொள்கை அதாவது பழைய அரசியலை மாற்றுவது என்று அவர் சொன்னவுடன் அவையில் சிரிப்பலை எழுந்தது. உடனே நிர்மலா சீதாராமன் சிரித்துக் கொண்டே 'எனக்குத் தெரியும் நன்றி' என்றார், பழைய அரசியல் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டதை காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக சாடும் வகையில் இருப்பதாக பலரால் புரிந்து கொள்ளப்பட்டது இதன் காரணமாகவே அவையில் சிரிப்பலை ஏற்பட்டதாக பார்க்கப்படுகிறது.