கருணாநிதி சிலை மீது கை வைத்தால் எங்கள் கை பூப்பறிக்குமா? என்று சீமானுக்கு அமைச்சர் சேகர் பாபு கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய சேவையை பாராட்டி சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. சுமார் 81 கோடி மதிப்பில் இந்த பேனா சிலை அமைக்கப்பட உள்ளது இதற்கு கடற்கரையின் ஒரு பகுதியில் மணலை குவித்து அதில் பேனா நடப்படுகிறது கடற்கரையில் சிலை வைப்பது சுற்றுச்சூழலுக்கு பேராபத்து என சுற்றுச்சூழல் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நேற்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கருத்து கேட்புக் கூட்டத்தை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது இந்தக் கூட்டத்தில் கருணாநிதியின் நினைவாக பேனா சிலை வைப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் இந்திய மீனவர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் சமூக சொற்பாட்டாளர் முகிலன் பேசும்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் அவரை பேசவிடாமல் திமுகவினர் சலசலப்பில் ஈடுபட்டனர் மாவட்ட ஆட்சியர் சமாதானப்படுத்தினர்,பின்பு குறைந்த அளவே தன்னை பேச வைத்ததாக கூறி முகிலன் உள்ளிருப்பு போராட்டத்தில் நடத்தினார், இதை எடுத்து அவரை போலீசார் வெளியேற்றினர்.
பின்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் கலந்து கொண்டு பேசினார் கடலின் 8,551.13 சதுர மீட்டரை நீங்கள் எடுத்துக்கிறீர்கள் அதில் பேனா வைக்க வேண்டும் என்றால் கல்லை மண்ணை கொட்ட வேண்டும் இதனால் ஏற்படும் அழுத்தத்தால் அங்கீகரிக்கும் பவளப்பாறைகள் பாதிக்கப்படும் கடற்கரையில் புதைக்க விட்டதே தவறு இதில் பேனா நினைவுச் சின்னம் வேறு வைக்க வேண்டுமா? வேண்டுமென்றால் அறிவாலயத்தில் போய் வையுங்கள், நினைவிடம் கட்டி இருக்கிறீர்களே அங்கு வையுங்கள் கடலுக்குள் தான் வைப்பார்களாம். இதனால் 13 மீனவர் கிராமங்கள் பாதிக்கப்படும், சும்மாவே மீனவ சங்கம் என்ற பெயரில் அகில இந்திய மீனவ சங்கம், அனைத்தும் மீனவ சங்கம் என்ற பெயரில் இங்கு வந்து சிலை வைத்தால் ஒரு ஆபத்தும் இல்லை என எதையாவது பேசிக்கொண்டு இருக்காங்க நீங்கள் பேனா வையுங்கள் ஒருநாள் நான் அதை உடைப்பேன் என்றார்.
பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை என்கிறார்கள் ஆனால் பேனா வைக்க மட்டும் காசு எங்கிருந்து வருகிறது என்று கூறினார். அப்போது அங்கிருந்த திமுகவினர் கூச்சலிட்டதால் அவர் வெளியேறினார் பின்பு சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கருணாநிதிக்கு பேனா சின்னம் வைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை ஆனால் கடலுக்குள் வைக்கக்கூடாது என்பது தான் எங்கள் கோரிக்கை என்றார். இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில் கருணாநிதியின் பேனா சிலையை சீமான் உடைக்கும் வரை எங்கள் கை பூ பறிக்குமா? இவருக்கு மட்டும் தான் கை இருக்கிறதா? எங்களுக்கு கை இல்லையா என கேள்வி எழுப்பினார்.