வழக்கம்போல் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றம்- மு க ஸ்டாலின்

Nila
1 year ago
வழக்கம்போல் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றம்- மு க ஸ்டாலின்

தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த பட்ஜெட் வழக்கம் போல பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார், ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும் சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நம்பிக்கையும் அளிக்கவில்லை எனவும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூட நிதி ஒதுக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம் இருக்கின்ற 157 மருத்துவ கல்லூரிகளில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் மாநிலங்களுக்கு மூலதன செலவினங்களுக்காக வட்டி இல்லா கடன் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அதிக முக்கியத்துவம் அளிப்பது போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்கள் ஆகும்.

நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டிற்கு UIDF என்ற புதிய நிதியை உருவாக்கி இருந்தாலும் இதற்காக 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது மிகக் குறைவானதாகும் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் ஒதுக்கீடு 48,000 கோடி ரூபாயிலிருந்து 79,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு வீட்டின் கட்டுமான விலையை உயர்த்தாவிட்டால் மாநிலங்களுக்கு அது கூடுதல் நிதிச் சுமையாக இருக்கும் மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ் உயர்ந்தவரும் விலைவாசியை கருத்தில் கொண்டு தனது பங்கை உயர்த்திட வேண்டும் என கூறினார்.