கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

Mani
1 year ago
கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது, இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலையில் இருந்தே மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது அதன்படி இன்று பல்வேறு இடங்களில் மலைக் கொட்டி தீர்த்து வருகிறது.

அந்த வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யம், கீழ்வேலூரில் காலையிலிருந்து 2 முதல் 3 சென்டிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது, கனமழை தொடர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது மேலும் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர் இதனை கருத்தில் கொண்டு நாகை மாவட்ட ஆட்சியாளர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (பிப்ரவரி 2)தேதி விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.

 இதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திலும் அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு அம்மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டார்,இதுபோன்று மயிலாடுதுறை மாவட்டத்திலும் நேற்று இரவிலிருந்து மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.