பார்த்தசாரதி கோயில் உதயநிதி ஸ்டாலின் தடபுடல் பொது விருந்து

Mani
1 year ago
பார்த்தசாரதி கோயில் உதயநிதி ஸ்டாலின் தடபுடல் பொது விருந்து

அண்ணா நினைவு நாளை ஒட்டி சென்னை பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற பொது விருந்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார் பொது விருந்தில் சாதம், சாம்பார்,ரசம்,அப்பளம், வடை,பாயாசம்,கேரட் பொரியல் தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட மெனு இடம்பெற்றிருந்தது, மக்களோடு மக்களாக பொது விருந்தில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட அவர் தனது அருகில் அமர்ந்து சாப்பிட்டவர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

அண்ணா நினைவு நாளான பிப்ரவரி 3ஆம் தேதி ஆண்டுதோறும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரசித்து பெற்ற கோவில்களில் சமபந்தி விருந்து நடைபெறுவது வழக்கம் ஆகும், அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெறும் விருந்து என்பதால் மக்களோடு மக்களாக சென்னை பார்த்தசாரதி கோவில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் இந்து சம அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

சென்னையை போலவே தமிழ்நாடு முழுவதும் உள்ள பல கோவில்களில் அண்ணா நினைவு நாளை ஒட்டி சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது, இதனிடையே பல ஆண்டுகளாக சமபந்தி போஜன விருந்து என்று அழைக்கப்பட்டு வந்த வார்த்தையை விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் கோரிக்கை ஏற்று சமத்துவ விருந்து பொது விருந்து என மாற்றியது தமிழ்நாடு அரசு.