சிக்கிம் அரசின் புதிய திட்டம் குவியும் பாராட்டுக்கள்

Mani
1 year ago
சிக்கிம் அரசின் புதிய திட்டம் குவியும் பாராட்டுக்கள்

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் அம்மாநில அரசு சுற்றுச்சூழலை காக்க புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, அம்மாநிலத்தில் இனி புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மரங்கள் நடப்படும் என மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்த ஆஷா மற்றும் அங்கன்வாடி, பஞ்சாயத்து, வனத்துறை ஆகிய ஊழியர்களை சிக்கிம் அரசு களமிறக்குகிறது. இத்திட்டத்திற்கு

' (Plant a Tree, Leave a Legacy) 'மரம் நடுங்கள், உங்கள் தடத்தை பதிவு செய்யுங்கள்' என்ற கருத்தில்  பெயரிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு திட்டத்தை முதலமைச்சர் பிரேம் சிங் தொடங்கி வைத்தார்.

அரசின் இந்த புதிய திட்ட விழாவிற்கு மாநில தலைமை செயலாளர் விபி பதக், வனத்துறை செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் பங்கேற்றனர். முதலமைச்சர் பிரேம் திட்டத்தை தொடங்கி வைத்து புதிதாக பெற்றோரான தம்பதியருக்கு 100 மரக்கன்றுகளையும், விதைகளையும் வழங்கினார்