உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இன்கோவேக்
உலக அளவில் நாசி வழியே கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தும் முதல் நிறுவனம் பாரத் பயோடெக். கொரோனா தடுப்பூசியாக முதல் மற்றும் இரண்டாம் டோஸ் பெற்றவர்கள் போஸ்ட் தடுப்பூசியாக நாசி வழியாக மருந்தை செலுத்திக் கொள்ளலாம். கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் எடுத்தவர்கள் இரண்டாம் டோஸ் ஆகவும் இந்த மருந்தை நாசி வழியாக செலுத்திக் கொள்ளலாம்.
இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு முதல் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் ஓர் முயற்சியாக கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது அது ஊசி வழியாக முதல் மற்றும் இரண்டாவது டோஸாக ஊசியின் வழியாக செலுத்தப்பட்டது பின்பு பின்பு பூஸ்டர் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது. இந்த இந்தத் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து மக்களுக்கு இலவசமாக செலுத்தி வந்தது இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் இன்கோவேக் நாசிக் வழியாக செலுத்தப்படும் தடுப்பூசி மருந்து அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த தடுப்பு மருந்து கடந்த குடியரசு தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை மந்திரி டாக்டர் ஜிதேந்திரா சிங் , பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா மற்றும் இணை மேலாண் இயக்குனர் சுசித்ரா எல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். நாசி வழியாக செலுத்தப்படும் கோவிட் தடுப்பூசியை மத்திய சுகாதார மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார் கோவில் ஷீல்ட் மற்றும் கோவாக்ஷன் ஆகிய இரு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் பூஸ்டர் டோஸாக நாசிக் வழியாக செலுத்தும் இன்கோவேக்கை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய சுதந்திர அமைச்சகம் தெரிவித்தது.
ஊசி இன்றி வலியின்றி தடுப்பு மருந்து எடுத்து செலுத்தப்படும் இந்த இன்கோவாக் தடுப்பு மருந்து நாட்டின் முதல் பூஸ்டர் தடுப்பு மருந்து என்று பெருமை பெறுகிறது பாரத் பயோடெக் நிறுவனம் செயல் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா கூறும்போது இந்த கொரோனா தடுப்பு மருந்து இன்கோவேக் எடுத்துக் கொள்வதற்கு எளிது இதனை செலுத்தி செலுத்த ஊசி தேவையில்லை. அதிலிருந்து மூன்று வகையான நோய் எதிர்ப்பு ஆற்றல் கிடைக்கும். ஐ ஜி ஜி , ஐ ஜி ஏ மற்றும் டி செல் ஆகிய எதிர்ப்பு சக்தி இம்மருந்தின் மூலம் உற்பத்தி செய்கிறது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதை பூஸ்டர் தோசை பயன்படுத்த முடியும் இம்மருந்தின் விலை தனியார் மருத்துவமனையில் 800 ரூபாய் எனவும் அரசு மருத்துவமனை ரூபாய் 325 எனவும் விற்பனை செய்யப்படும்
இதன் விநியோகம் தொடங்கிவிட்டது இதன்படி இந்தியாவின் நவீன தடுப்பு மருந்துகள் சிகிச்சை முறைகள் மற்றும் சர்வதேச சுகாதாரக் கல்வி ஆகியவை முதன் முறையாக இந்தியாவில் நிறுவப்பட்ட ஒரு ஒப்பந்தம் செயல்பாட்டில் உள்ளது இதனால் இரண்டு நாட்களுக்கு முன்னரே மருத்துவமனைக்கு இன் கோவேக் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் உபயோகத்திற்கு அவை கொண்டு வரப்பட உள்ளன. இது செலவு மிச்சப்படுத்தும் ஒரு வகையான தடுப்பு மருந்து தனியாக ஊசிகளோ ஆல்கஹால் துடைப்பான்களோ கட்டுப்படும் துணிய என எதுவும் தேவையில்லை விநியோகம் சேமித்து வைத்தல் மற்றும் உயிர் மருந்து கழிவு அகற்றும் என அனைத்து வகையிலும் செலவு மிச்சப்படுத்தும்.