பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால்... வரிச் சலுகைகள் இல்லை: மார்ச் 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது

Mani
1 year ago
பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால்... வரிச் சலுகைகள் இல்லை: மார்ச் 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது

இதுவரை தனி நபர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள 61 கோடி PAN எனப்படும் நிரந்தர கணக்கு எண்கள் 48 கோடி பேர்களின் எண்கள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன.
மார்ச் 31க்குள் மீதமுள்ளவர்கள் இணைக்காவிட்டால் வர்த்தகம் மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது சலுகைகளை அனுபவிக்க முடியாது என மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா தெரிவித்தார்.வருமான வரித்துறையால் வினியோகிக்கப்படும் 10 இலக்க எழுத்து மற்றும் எண்கள் உடைய அட்டை, PAN எனப்படும்.

வங்கிக் கணக்கு துவங்குவது முதல், வருமான வரி தாக்கல் வரையிலான பல்வேறு நிதி நடவடிக்கைகளுக்கு நிரந்தர கணக்கு எண் அவசியமாகிறது.

யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையத்தால் அனைத்து குடிமகன்களுக்கும் ஆதார் எண் வழங்கப்பட்டுஉள்ளது.ஆதார் அட்டையுடன், நிரந்தர கணக்கு எண்ணை இணைக்கும்படி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.மத்திய அரசு இதற்கான கால அவகாசம் பல்வேறு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், மார்ச் 31 கடைசி நாள் என அறிவித்துள்ளது.

மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா, செய்தியாளர்களிடம் கூறியதாவது.
தனி நபர்களுக்கான, 61 கோடி நிரந்தர கணக்கு எண்கள் இதுவரை வினியோகிக்கப்பட்டுஉள்ளன.
இதில், 48 கோடி எண்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 13 கோடி எண்கள் இணைக்கப்படவில்லை,கடைசி நாளான மார்ச் 31க்குள் அவை இணைக்கப்பட்டுவிடும் என நம்புகிறோம்.
இந்த இணைப்புக்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. இந்த முறை நிச்சயம் நீட்டிக்கப்படாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆதாருடன், நிரந்தர கணக்கு எண்ணை இணைக்காவிட்டால், என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

பான் அட்டை செயலற்றதாகிவிட்டால், வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய முடியாது.நிலுவையில் உள்ள கணக்கு தாக்கல் நடைமுறை முடக்கப்படும். வருமான வரித்துறையிடம் இருந்து வரவேண்டிய தொகை கிடைக்காது. வரி பிடித்த விகிதம் அதிகரிக்கும்.

வங்கி உட்பட இதர நிதி சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!