வங்கதேசத்தில் இந்துக் கோயில்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்கின்றன!

Mani
1 year ago
வங்கதேசத்தில் இந்துக் கோயில்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்கின்றன!

வங்கதேசத்தில் 14 இந்து கோவில்கள் இனந்தெரியாத ஆசாமிகளால் தாக்கப்பட்டுள்ளன.

துணை போலீஸ் கமிஷனர் மஹ்புபர் ரஹ்மான், போலீஸ் சூப்பிரண்டு முகமது ஜகாங்கிர் உசைன், இந்து, புத்த, கிறிஸ்தவ ஒய்கியா பரிஷத் பொதுச்செயலாளர் பிரபீர் குமார் குப்தா ஆகியோர் பாதிக்கப்பட்ட இடத்துக்கு சென்றனர்.

சிந்துர்பிண்டி கோவிலில் ஒன்பது சாமி சிலைகளும், கல்லூரிபாரா கோவிலில் நான்கு சாமி சிலைகளும், ஷபாஜ்பூர் நாட்பாரா பகுதியில் உள்ள பன்னிரண்டு கோவில்களில் பதினான்கு சாமி சிலைகளும் திருடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

போலீஸ் அதிகாரி கைருல் அனம் கூறுகையில், சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை வரை இந்த தாக்குதல்கள் நடந்திருக்கலாம்.இனந்தெரியாத கும்பல் ஒன்று இரவோடு இரவாக சாமி சிலைகளை கொள்ளையடித்து, சிலவற்றை உடைத்துள்ளனர். சாமி பூஜை கொண்டாட்டங்களின் பொதுச் செயலாளர் வித்யாநாத் பர்மன் கூறுகையில், சில சிலைகள் அருகில் உள்ள குளத்தில் வீசப்பட்டன.

அண்மைக்காலமாக வெளிநாட்டில் இடம்பெற்ற ஆலயத் தாக்குதல்கள் மற்றும் இந்நாட்டில் இடம்பெற்ற சிலை வீச்சு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபாநாயகர் கோருகின்றார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது, மர்ம நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.