இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அதானி விவகாரம்
அதானி நிறுவனங்கள் விவகாரத்தால், இந்திய நாடாளுமன்ற இரண்டு அவைகளில் நேற்றும் அலுவல்கள் எதுவும் இடம்பெறவில்லை.
நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டத்தால் பதற்றநிலை தோன்றியது.
இந்தியாவின் பெரும் தொழிலதிபரான அதானியின் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த அறிக்கை இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதன் காரணமாக இரண்டு அவைகளும் வழக்கமான அலுவல்கள் நடைபெறாமையால், தொடர்ந்தும் மூன்றாம் நாளாக நேற்றும் முடங்கின.
இந்தநிலையில் அதானி விவகாரம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி எதனையும் செய்வார் என்று காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.