ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி மேலும் ஒரு இழப்பு ! மகனின் விபரீத செயலால் தாய் தற்கொலை
சென்னை கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் தேவேந்திரன் அவருக்கு வயது 22, சென்னை வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதி சேர்ந்தவர் கண்ணன் செல்வி இவருடைய மகன் தேவேந்திரன் அவர் நிறுவனத்தின் சொந்தமான மூன்று லட்சம் பணத்தை ஆன்லைன் ரம்மி மூலம் விளையாடி அதை இழந்துள்ளார்.
தேவேந்திரன் தன் பணிபுரியும் நிறுவனத்திற்கு எந்த அறிவிப்பு தராமலும் சில நாள் கடந்து சென்றுள்ளார் பின்பு நிறுவனத்தின் மற்ற அதிகாரிகள் மூலம் இவரின் கையாடல் தெரிய வந்துள்ளது.பின்பு தேவேந்திரனை தொடர்பு கொண்டால் இவருடைய போன் தொடர்பற்று இருந்தது. தேவேந்திரன் வீட்டிற்கு யாரிடம் சொல்லாமலே இருந்துள்ளார் பின்பு நிறுவனத்திற்கு தெரிந்ததும் இவர் நிறுவனத்திற்கும் செல்லவில்லை வீட்டிற்கும் செல்லவில்லை.
இதை அறிந்த கம்பெனி நிர்வாகம் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தனர், இதை தொடர்பாக தேவேந்திரன் பெற்றோர் பணத்தை விரைவில் ஒப்படைத்து விடுவதாக கூடுவாஞ்சேரி போலீசில் உத்தரவாதம் அளித்துள்ளனர், தலைமறைவாகிவிட்டதால் பணத்தை கட்ட முடியாமல் பெற்றோர் தவிர்த்து வந்த நிலையில் ,மன உளைச்சல் காரணமாக நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார் அவருடைய தாயார்.
செல்வியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதையை உடைத்து பார்க்கும் போது செல்லி செல்வி தீயில் கருகி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பின்பு போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயில் கருகி பலியான செல்வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து வியாசர்பாடி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.