விறுவிறுப்பு கட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் !
விறுவிறுப்பு கட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் மறைவை காரணமாக வருகிற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் இ வி கே எஸ் இளங்கோவன் அவர்களும் அதிமுக சார்பில் கே எஸ் தென்னரசு அவர்களும் , தேமுதிக சார்பில் எஸ் ஆனந்த், மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா மற்றும் 83 வேட்பாளர் களத்தில் உள்ளனர். அரசியல் கட்சிகள் தங்களுடைய பிரசாரத்தை தொடங்கி மக்களிடம் தங்களுடைய கொள்கைகளை எடுத்து கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இடைத்தேர்தல் வேட்பு மனு பரிசீலனை நிறைவு பெற்ற நிலையில் 121 வேட்பு மனுக்களில் பரிசினைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது இதில் 83 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.ஏற்கனவே அரசில் கட்சித் தலைவர் ஓபிஎஸ் சார்ந்த வேட்பாளர் மற்றும் டிடிவி தினகரன் சார்ந்த வேட்பாளர் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இடைத்தேர்தலில் வேட்பு மக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.