கோதுமை அலர்ஜி: பரோட்டா சாப்பிட்ட 16 வயதான மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்
கேரளா
இடுக்கியில் பரோட்டா சாப்பிட்ட இளம் பெண் மைதா அலர்ஜியால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் நயன் மரியா. 16 வயதான, அங்குள்ள பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார் .
இவருக்கு மைதா, கோதுமை உணவுகளை உண்டால் உடலுக்கு ஒத்துக்காது . இதனால் , பெற்றோர் மைதா, கோதுமையில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாமென்று அறிவுறுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், பரோட்டா சாப்பிட ஆசைப்பட்டுள்ளார் .
தொடர்ந்து, பெற்றோருக்கு தெரியாமல் அங்குள்ள ஹோட்டலில் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். பரோட்டா சாப்பிட்டு முடித்ததுமே மயங்கி விழுந்துள்ளார் .
அங்கிருந்தவர்கள் நயன் மரியாவை மீட்டு இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். உடனடியாக சிகிச்சை மருத்துவ அளித்துள்ளனர். ஆனாலும் , காப்பாற்ற முடியவில்லை. சிகிச்சை பலனளிக்காமல் நயன் மரியா இறந்து போனார். இந்த சம்பவம் கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.