பெண்களே உங்கள் பிரச்சினைகள் எதுவானாலும் அவற்றை அடக்கிக்கொள்ளாதீர்கள்.

#ஆரோக்கியம் #மன_அழுத்தம் #பெண்கள் #நோய் #லங்கா4 #Health #Disease #stress #Women #Lanka4
பெண்களே உங்கள் பிரச்சினைகள் எதுவானாலும் அவற்றை அடக்கிக்கொள்ளாதீர்கள்.

பெண்கள்  உடற்பயிற்சி, உணவு சரியாக இருந்தாலும்கூட, மன அழுத்தம்  அவர்களுக்கு  பிரச்சினைகளை அடக்குவதால் வருகிறது.  சில பெண்களுக்கு மன அழுத்தம் இருப்பது தெரியாமலே திடீரென மாரடைப்பு வந்து இறந்துகூடப் போய் விடகூடும்.

பெண்கள் தங்கள் பிரச்னைகளை ஏன் பிறரிடம் பகிர்ந்து கொள்வதில்லை? 

இதற்குப் பின்னால் இருப்பது, வீட்டு விஷயத்தை பெண்கள் வெளியே சொல்லக்கூடாது என்றொரு கற்பிதம்தான். கணவனாலோ, குடும்பத்தினராலோ, உறவினர்களாலோ, ஏன் குழந்தைகளாலோகூட ஒரு பிரச்னை ஏற்பட்டால், அந்தப் பெண்ணால் நெருங்கிய தோழியிடம் கூட சொல்லி, ஆற்றிக் கொள்ளவோ, தீர்வு காணவோ முடியாமல் இருக்கிறார்கள்.

`வீட்டு விஷயத்தை ஏன் வெளியே சொல்றே? நீயெல்லாம் ஒரு குடும்பப் பெண்ணா?’ என ஏசுவார்களோ என்ற பயத்தினால் பெரும்பான்மை பெண்கள், குறிப்பாக நடுத்தர, மேல்தட்டுப் பெண்கள், தமக்குள்ளே போட்டு புதைத்துக் கொள்கிறார்கள். 

நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தில், படித்து விட்டு வேலை பார்க்கும் பெண்ணோ, இல்லத் தரசியாக வீட்டில் இருக்கும் பெண்ணோ தன் அழுத்தங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் தவித்து, அது உயர் ரத்த அழுத்தத்தில் போய் முடிகிறது. வெளியில் பிரச்னை என்றால் குடும்பத்தில் பகிர்ந்துகொள்ளலாம். குடும்பமே பிரச்னை என்றால் என்ன செய்வது?
யாரிடம் பகிர்வது ?. 

உங்களுக்கு நம்பிக்கையான நெருங்கிய தோழியிடம் சொல்லலாம். `அவள் என்னை பற்றி என்ன நினைப்பாள்... என் குடும்பத்தை பற்றி என்ன நினைப்பாள்?’ என்றெல்லாம் எண்ணி குழப்பிக்கொள்ளாதீர்கள்.

வீட்டுக்கு வீடு வாசல்படி உள்ளது. இங்கு எல்லாருக்கும் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் தனியாள் இல்லை. உங்கள் தோழி ஓரளவு நம்பிக்கைக்கு உகந்தவராக, நீங்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்கக் கூடியவராக இருந்தாலே போதுமானது.

பெண்களிடம் ரகசியம் தங்காது, தோழிகள் என்றாலே வம்பு பேசுவார்கள் என்றெல்லாம் காலங்காலமாக இந்த ஆணாதிக்க பொதுப் புத்தி கூறி வந்திருப்பது வெறும் கற்பிதமே. 
பெண்கள் ஒன்று சேர்ந்துவிடக் கூடாதே என்ற பயத்தின் வெளிப்பாடுதான் அவை. 

சில விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டாலே, மனது லேசாகிவிடும். நீங்களே தீர்வை கண்டுபிடித்துவிடுவீர்கள். அப்படி இல்லாவிட்டால் தோழியிடம் ஆலோசனை கேட்கலாம். அவர் சொன்னால் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் இல்லை.

காலப்போக்கில் நம்பிக்கையானவர்களை நீங்களே தேர்ந்தெடுத்து தனிப்பட்ட விஷயங்களை பகிர ஆரம்பித்துவிடுவீர்கள்.`எனக்கு தோழிகளே இல்லை, என்ன செய்வது?’ என இருப்போர், மனநல ஆலோசகரைப்  பாருங்கள்.

அவர் உங்க பிரச்னைகளைப் பொறுமையா காது கொடுத்துக் கேட்பார், சரியான ஆலோசனைகள் மனநல மருத்துவரிடமோ, மனநல ஆலோசனை குறித்து முறையான கல்வி பயின்ற தெரபிஸ்ட் எனப்படும் ஆலோச கரிடமோ செல்வதில் தவறொன்றும் இல்லை 

தோழியரே, தெரபிஸ்டிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கிப் போய்  நமது மனநலனுக்கு உகந்தது. 
தோழிகளே, தேவையில்லாத அழுத்தங்களை வெளியே சொல்லாமல் சுமந்து கொண்டு நோயாளியாக அலைய வேண்டாமே.

ஆகையால் பெண்களே உங்கள் பிரச்சினைகள் உரியவர்களுடன் பகிர்ந்து நீங்களும் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்திடுங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!