ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் மாணவர்களால் தாக்கப்பட்டார்.
நேற்று, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுரஜித் மஜும்தார், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் உரையாற்ற வந்தார்.
குடிமக்கள் மன்றம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்திய அரசியலமைப்பு மற்றும் கல்விக் கொள்கை குறித்து பேசினார்.
இந்நிலையில், கருத்தரங்கில் தேசவிரோத கருத்துக்கள் பேசப்படுவதாகக் கூறி குறிப்பிட்ட மாணவர் அமைப்பினர் அவரைத் தாக்கினர்.இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். இரு தரப்பினரும் ஷஹீத் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சில மாணவர்களால் தேச விரோதமாக கருதப்படும் சில கருத்துக்களை பேராசிரியர் சுர்ஜித் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள் உடனடியாக அவரை தாக்கத் தொடங்கினர்.குடிமக்கள் மன்றத்தின் நிர்வாகி பிரதீப் நாயக் மற்றும் விரிவுரையாளர் சுரேந்திர ஜெனா ஆகியோரையும் மாணவர்கள் வசைபாடினர்.
இந்த சம்பவத்தால் கருத்தரங்கு பாதியில் நிறுத்தப்பட்டது. எனினும், இந்த மோதலுக்கான உண்மையான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.