ஆரோக்கியம் தரும் வால்நட்டின் நன்மைகள்
மனித மூளையைப் போன்ற தோற்றம் கொண்டது வால்நட். காப்பர், மாங்கனீசு, மெக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், புரதம், ஆன்டி ஆக்சிடன்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து என மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவும் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. பல்வேறு நன்மைகளை தரும் வால்நட், சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு அதிக அளவில் பயன்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யைப் பயன்படுத்தி சருமத்தின் பொலிவையும், தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கான வழிகளை இங்கு பார்ப்போம்.
சுருக்கம் மற்றும் வறட்சி:
வால்நட் எண்ணெய்யை தினமும் முகத்தில் தடவி, கீழிருந்து மேல் நோக்கியவாறு வட்டவடிவில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் எண்ணெய் ஊடுருவி, சுருக்கங்களை நீக்கி, இளமை தோற்றத்தை மீட்டுத்தரும். இரவில், இந்த எண்ணெய்யை நன்றாகத் தடவி மசாஜ் செய்து வந்தால், சரும வறட்சி நீங்கி ஈரப்பதமாகும்.
சருமத் தொற்று மற்றும் கருவளையம்:
வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாக சருமத்தில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றை குணப்படுத்த, வால்நட் எண்ணெய்யை ஏதேனும் ஒரு மூலிகை எண்ணெய்யுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வரலாம்.
பெண்கள் பலருக்கும் பெரிய பிரச்சினையாக இருப்பது, கண்களுக்குக் கீழே உருவாகும் கருவளையம்தான். இதற்கு வால்நட் எண்ணெய் சிறந்த தீர்வாகும்.
சிறந்த மாய்ஸ்ச்சரைஸர்:
சருமத்துக்கு வால்நட் மிகச்சிறந்த மாய்ஸ்ச்சரைஸராகச் செயல்படுகிறது.
சருமத்தில் ஏற்படும் சரும வறட்சியைப் போக்கி, மென்மையாகவும் சருமத்துக்கு தேவையா ஈரப்பதத்தையும் தக்க வைக்கிறது
கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது:
ஊறவைத்த அக்ரூட் பருப்புகளை உட்கொள்வது எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, இது உங்கள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.