கோடை நெருங்குவதனால் நீர்வரட்சியை தடுக்க தினமும் நீரினை நிறைய பருகுங்கள்.

#ஆரோக்கியம் #தண்ணீர் #குடித்தல் #தகவல் #லங்கா4 #spiritual #water #drink #information #Lanka4
கோடை நெருங்குவதனால் நீர்வரட்சியை தடுக்க தினமும்  நீரினை நிறைய பருகுங்கள்.

ஒரு சாதாரண மனிதன் தினமும் 3 இலிட்டர் அல்லது 6 கோப்பை நீரினை பருக வலியுறுத்தப்படுகிறது. தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்துவதால் உடல் உறுப்புகள் சுத்தமாகும்.

உடலின் வெப்பநிலை சரியாக இருக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது தலைச்சுற்றல், மயக்கம், களைப்பு, தலைவலி போன்றவை வரலாம். 

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது நாக்கு வறண்டுபோகும். உதடுகள் வெடிக்கும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். 
எனவே தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடித்துப் பழகாமல் குறிப்பிட்ட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடித்துப் பழகுவது நல்லது.

வெறும் தண்ணீர் குடிப்பது சிலருக்கு குமட்டலை ஏற்படுத்தலாம். ஆகவே, தண்ணீரில் சிறிது எலுமிச்சைப் பழச்சாறு கலந்து புதினா இலைகள் சேர்த்துக் குடிக்கலாம்.  நீர்வறட்சி ஏற்படாமலிருக்க வெறும் தண்ணீர்தான் குடிக்க வேண்டும் என்றில்லை. 

கொழுப்பு நீக்கப்பட்ட தயிரில் தண்ணீர் சேர்த்து நீர் மோராக்கி, நாள் முழுவதும் சிறிது சிறிதாகக் குடிக்கலாம். சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்துவது செரிமானத்துக்கும் சிறந்தது. உடலையும் குளிர்ச்சியாக வைக்கும்.

  • சூப், ரசம், இளநீர் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நீர் வறட்சியைத் தவிர்க்கும். 
  • சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், இதய நோயாளிகளும் மருத்துவர் அனுமதிக்கும் அளவு மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். 
  • மற்றபடி குழந்தைகள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை வலியுறுத்த வேண்டும். அடிக்கடி சிறுநீர்த்தொற்றுக்கு உள்ளாகிறவர்களும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கப் பழக வேண்டும். 
  • சிறுநீரகம் மற்றும் இதய பாதிப்புகள் இல்லாத ஆரோக்கியமான நபர்கள் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!