ஆஸ்துமாவை குணமாக்கவல்ல எளிய இயற்கை மருத்துவ முறை. செய்து சுகம் பெறுங்கள்...

#ஆரோக்கியம் #நோய் #குணப்படுத்தல் #இன்று #தகவல் #Health #Disease #remedy #information #Lanka4
ஆஸ்துமாவை குணமாக்கவல்ல எளிய இயற்கை மருத்துவ முறை. செய்து சுகம் பெறுங்கள்...

சகல வயதினரையும் தாக்க வல்லது இந்த ஆஸ்துமா நோய். இதற்கு காரணம் மாசு, ஒவ்வாமை, வைரஸ் தொற்றுக்கள், குடும்ப பாரம்பரியம், எதிர்ப்பு சக்தி தாழ்வு, மன அழுத்தம் ஆகியவையாகும்.

ஆஸ்மா ஆண்களுக்கே அதிகம் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. பெண்களை விட ஆண்களுக்கு மன அழுத்தம் அதிகம் காணப்படுவதாலேயே இது வருகிறது.

 கவலை, இதன் காரணமாக முதலில் தலைவலி, தூக்கமின்மை பிரச்னைகளாக உருவாகி, பின் நாளடைவில் நுரையீரல் பாதிப்பு மூச்சுத்திணறல், ஆஸ்துமாவாக வருகின்றது. இதிலே நாம் நவீன மருத்துவ முறைகளை விடுத்து இயற்கையான மருத்துவ முறைகள் என்வென்ன எனக் காண்போம்.

தூதுவளை செடியின் இலைகளை கொண்டு ரசம் வைத்து உணவுடன் உண்டுவர, சளி பிரச்னை இருக்காது. மூச்சு பிரச்னையும் வராது.துளசி இலைகளை மென்று சாப்பிட, எளிய வழியில் சளி, தொண்டைப் பிரச்னைகளை சரி செய்கிறது. மேலும் வில்வ இலைகளை மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட, நல்ல பலனைத் தரும்.முசுமுசுக்கை இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர ஆஸ்துமாவிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

மாதுளம் பழச்சாறு, எலுமிச்சைச்சாறை வெதுவெதுப்பான நீர் கலந்து ஜூஸாக குடித்துவர, உடலுக்கு தேவையான எனர்ஜியை தந்து, நோய்த் தொற்றிலிருந்து காக்கும். கற்பூரவல்லி இலை 3, மிளகு 3, வெற்றிலை 2 சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, வற்றியவுடன் அந்த நீரைப் பருக, நெஞ்சுசளி, கபம் போன்றவற்றை நீக்கி, எளிதான சுவாசத்துக்கு வழி வகுக்கும். அருகம்புல் சாறை அதிகாலையில் பருகி வர, நோய்த்தொற்றை நீக்கி உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகிறது.

ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர, சளித் தொல்லை குறையும். மிளகுத்தூளை சாதத்தில் போட்டு சாப்பிட, நெஞ்சகப் பிரச்னை வராமல் தடுக்கும். மாசு உள்ள இடத்தை தவிர்ப்பதும், அலர்ஜி தரும் உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும், மூச்சுப் பயிற்சி, தியானம் பழகுவதும் ஆஸ்துமா தொந்தரவுகளிலிருந்து விடுபட சில எளிய தீர்வாக உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!