தினமும் மோர் குடிப்பதனால் கொலஸ்ரோலைக் கட்டுப்படுத்தலாம். அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம்...!
நமது மூதாதையர்கள் யாரும் விருந்தாளிகள் வ ீட்டிற்கு வந்தால் அல்லது வெளியில் சென்றால் மோர்தான் குடிக்கச் செய்வார்கள். காரணம் அக்காலங்களில் குளிர்பானங்கள் இல்லை. இந்த மோர் பாலில் இருந்து பெறப்படுவதுடன் மிகவும் ஆரோக்கியமானது.
இந்த மோரை நாம் தினமும் காலையில் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள் என்னென்னவென இங்கு பார்க்கலாம்.
பலர் மோர் குடிக்கவே பயப்படுபவர்கள், இதில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்தால் இதுவரை மோரை குடிக்காதவர்களும் கண்டிப்பாக குடிப்பார்கள்.
உடற் செரிமானத்திற்கு
வெயில் காலங்களில் மோர் குடிப்போர் எண்ணிக்கை அதிகம் . ஆனால் மழை காலங்களிலும் பனி காலங்களிலும் தான் மோர் குடிக்க வேண்டும். காரணம் இவை செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு
மோரில் இஞ்சி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து குடித்தால், ருசியாகவும் நல்ல மணத்துடனும் இருக்கும். இத்தகைய மோரை அன்றாடம் ஒருமுறை குடித்தால், பல்வேறு நன்மைகள் கிடைத்து, உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
செரிமானத்திற்கு மிகவும் நல்லது:
மோரில் சேர்க்கப்படும் சீரகப் பொடி போன்ற மசாலாப் பொருட்களும் செரிமானத்திற்கு உதவுவதோடு, செரிமானத்தை எளிதாகவும் மேலும் சரியானதாகவும் ஆக்கும்.
உடல் வெப்பநிலையை தணிக்கும்:
கோடை வெப்பத்தால் உடல் வெப்பமடைகிறது. இதைத் தடுக்க, அதிக அளவு வியர்வை தேவைப்படுகிறது. மோர் இந்தப் பிரச்சனையைத் தடுத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
வயிற்றுப் போக்கு:
வயிற்றுப் போக்கால் கஷ்டப்படுபவர்கள், மோரில் இஞ்சி பொடி அல்லது நற்பதமான இஞ்சியை தட்டிப் போட்டு குடித்தால் குணமாகும். அதுவும் விரைவில் குணமாவதற்கு, ஒரு நாளைக்கு 3 முறை மோரைக் குடிக்க வேண்டும். இதனால் இரண்டே நாட்களில் வயிற்றுப்போக்கு பிரச்சனை குணமாகிவிடும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
மோரில் கால்சியம் தவிர பல்வேறு புரதங்கள், வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு துணைபுரிகின்றன. இதன் விளைவாக, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
உயர் இரத்த அழுத்தத்திற்கு
மோரில் ஆன்டி-வைரல், ஆன்டி-கேன்சர் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளது. ஆகவே மோரை தினமும் குடித்தால், இரத்த அழுத்தம் குறையும் மற்றும் இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வின் படி மோரில் கொலஸ்ட்ராலை குறைவாக பேணும் பயனுள்ள மூலக்கூறுகள் உள்ளன. மேலும் ஆயுர்வேதத்தின் படியும், தினமும் மோர் குடித்து வருவதால் ஆரோக்கியம் மேம்பட்டு நோயெதிர்ப்புச்சக்தி அதிகரிப்பதாக கூறப்பட்டுள்ளது.