மாரடைப்பு வந்தவர்கள் சில வாரம் கழித்து உடலுறவு கொள்ளலாம்! மருத்துவர்களின் அறிவுரை
காலப்போக்கில் இன்று மனிதர்கள் படும் சிரமங்கள் அதிகம், ஆம் மனிதன் நாகரிகாலத்தில் உடம்பை பேணி காப்பது தவறிவிட்டதனால் ஏற்படுகின்ற விளைவு தான் உயரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் என்பதை மாரடைப்பு என்போம், மாரடைப்பு இரண்டு வகை படுத்தலாம் அதில் லேசான மாரடைப்பு, ஹெவி அட்டாக் என்று குறிப்பிடலாம்.
லேசான மாரடைப்பு வந்து ஸ்டண்ட் வைத்திருப்பார்கள் மிக கவனமாக இருக்க வேண்டும், ஹெவி அட்டாக் அட்டாக் வந்தவங்க கூடுதலாக கவனம் தேவை. மாரடைப்பு வந்தவர்கள் மனதிலே தோன்றது உடலுறவு வைத்துக் கொள்ளலாமா என்று? ஆம் வைத்துக் கொள்ளலாம் அதுக்கு சில வழிமுறைகளை நாம் கடைபிடிக்க வேண்டும்.
பாலியல் செயல்பாடு அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருந்தாலும் மனிதர்களைப் போல ஆண்டு முழுவதும் பாலில் செயல்பாடுகள் எந்த உயிரினங்கள் ஈடுபடுவதில்லை. சாதாரண மனிதர்கள் உடலுறவு வைத்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் மாரடைப்பு வந்தவர்கள் உடலுறவு ஈடுபடுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்கள். இதயத்திற்கு செல்லும் குழாய்களில் ஏற்படும் அடைப்பு மாரடைப்பு என்று அழைக்கப்படுகிறது, இது கொழுப்பு தான் இந்த அடைப்பை ஏற்படுத்துகிறது இதற்கு சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தவர்கள் அன்றாட வாழ்க்கை கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். மாரடைப்பு வந்தவர்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன அதில் முதல் வகை நோயாளிகள் இதயத் துடிப்பு சீரானதாக இருக்கும் இதில் எந்த மாற்றமும் வராது.
இரண்டாவது வகை நோயாளிகளுக்கு இதயத் துடிப்பில் திடீர் ஏற்ற இயக்கங்கள் இருக்கும் ஒரு சீரான நிலையில் இது இருக்காது சில சமயங்களில் பலவீனமாக சில சமயங்களில் மிக வேகமாக இருக்கும் எனவே இருவர்களும் மிக கவனமாக இருக்க வேண்டும். முதலில் வகையை நோயாளியை விட இரண்டாவது வகை நோயால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். லேசான மாரடைப்பால் ஸ்டண்ட் பொருத்தப்பட்ட முதல் வகை நோயாளிகள் ஓரிரு வாரங்களுக்குள் தங்கள் உடலுறவு வாழ்க்கையை தொடங்கலாம், ஆனால் இரண்டாவது வகை நோயாளிகள் குறைந்தது 2 மாதம் காத்திருக்க வேண்டும்.
லேசான மாரடைப்பிலிருந்து தப்பியவர்கள் சாப்பிட்டவுடன் உடலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும். அதுவும் அசைவ உணவு எடுத்துக்கொண்டாலோ அல்லது, எண்ணெய் பலகாரங்கள் கொண்ட ஹெவி உணவுகளை எடுத்துக்கொண்டாலோ அவர்கள் குறைந்தது 1-3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். இப்படி காத்திருப்பதால் உணவு ஜீரணம் ஆகிவிடும். செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது இதயம் வேகமாக துடிக்கும். அதேபோல ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். இப்படி இருக்கையில் சாப்பிட்ட உடன் செக்ஸில் ஈடுபட தொடங்கினால் உடலின் செயல்பாடுகள் வேகமெடுத்து இதயத்திற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
உணவு செரிமானம் எனவே உணவு செரிமானத்திற்கு போதுமான நேரம் ஒதுக்குங்கள். அப்போதுதான் இதயத்தின் மீதான வேளை பளு குறையும். அதேபோல இரண்டாவது வகை நோயாளிகள் செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னர் சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். மாடி படி ஏறி இறங்குதல், விறுவிறுப்பாக நடைப்பயிற்சி செய்தல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். இந்த பயிற்சியின் போது உடல் களைப்பாக இருக்கிறதா? எந்த அளவுக்கு மூச்சு வாங்குகிறது? இதயத்தில் வலி இருக்கிறதா? போன்றவற்றை 'நோட்' செய்ய வேண்டும். இவையெல்லாம் இருப்பின் உடனடியாக செக்ஸ் எண்ணத்தை கைவிட வேண்டும்.
இந்த வலி சிறிது நேரத்திற்கு பின்னரும் தொடர்ந்தால் அருகில் இருக்கும் மருத்துவர்களை அணுக வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொருவரின் உடல் எடை, பாலினம், உணவு பழக்கம் போன்றவற்றால் இது வேறுபடலாம். எனவே இதையே முதன்மையாக கருதாமல் தங்களது மருத்துவரை அணுகி அதன் பின்னர் செக்ஸில் ஈடுபட வேண்டும்.