மரணத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய காரணிகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும் கருஞ்சீரகம்!

#ஆரோக்கியம் #கருஞ்சீரகம் #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Disease #Antoni #Theva #Antoni Thevaraj
மரணத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய காரணிகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும் கருஞ்சீரகம்!

நமது உடலின் ஆரோக்கியத்திற்கு திடீரென எதும் கெடுதி எற்பட்டால் அல்லது எற்படாமல் இருக்க நமக்கு நமது சமையலறையிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டே அவற்றிற்கு தீர்வு காணலாம் என்பது நம்மில் பெரும் பாலானோருக்குத் தெரியாது.

இந்த விதத்தில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்த உணவு பொருட்களில் ஒன்று தான் கருஞ்சீரகம். இந்த கருஞ்சீரகத்தில் தைமோகுவினோன் என்னும் வேதிப்பொருள் அதிகம் காணப்படுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அது உதவுகிறது.

கருஞ்சீரகத்தில் வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளது. சரி கருஞ்சீரகம் மருத்துவ பயன்கள் பற்றி இனி நாம் பார்ப்போம்.


பித்தப்பை மற்றும் சிறுநீரக கல் கரைய:-

பித்தப்பையில் கல் மற்றும் கிட்னியில் உள்ள கற்களை கரைக்க கருஞ்சீரகம் மிகவும் பயனுள்ளது. முதலில் கருஞ்சீரகத்தை பொடி செய்து கொள்ளுங்கள். பின் ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் பொடியை சேர்த்து நன்றாக கலந்து காலை வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் வரை அருந்திவர வேண்டும்.

இதனை நாம் செய்துவர பித்தப் பையில் உள்ள கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் கரைய ஆரம்பிக்கும். மேலும் ஜீரண சக்தி மேம்படுவதுடன் வாயு தொல்லை நீங்கி வயிறு சம்மந்தமான எந்த பிரச்சனைகளும் வராமல் தடுக்கும்.

சளி இருமல் குணமாக:-

சளி, இருமல், காய்ச்சல், தலைவலி போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்ற அனைவரும் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தில் தேன் கலந்து சாப்பிட்டு வர பிரச்சனைகள் குணமாகி உடல் நன்கு ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் காணப்படும்.

இந்த டிப்ஸினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பின்பற்றலாம். இருப்பினும் தங்கள் குழந்தைக்கு கொடுக்க தயக்கமாக இருந்தால் தங்கள் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுப் பின்பற்றலாம்.

தோல் நோய் குணமாக:-

தோல் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் கஸ்தூரி மஞ்சளுடன் சிறிதளவு கருஞ்சீரகம் சேர்த்து அரைத்து தோல் நோய் ஏற்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர பிரச்சனை குணமாகும். மஞ்சளில் கிருமி கொல்லி காணப்படுவதனால் இந்த கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவதால் தேமல், அரிப்பு, தடிப்பு மற்றும் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.

உடல் எடையை குறைக்க:-

கருஞ்சீரகம் கெட்ட கொழுப்பினை கரைக்கவல்லதனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வர உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கும். இதனால் தங்கள் உடல் எடையை இதன் மூலம் குறைத்துக்கொள்ளலாம்.

மாதவிடாய் பிரச்சனை குணமாக:-

மாதவிடாய்க் கோளாறுகளின் போது அடிவயிறு கனமாகி, சிறுநீர் கழிக்கச் சிரமப்படும் பெண்களுக்கு இது நல்ல மருந்து. வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத்துடன் தேன் அல்லது கருப்பட்டி கலந்து, மாதவிடாய் தேதிக்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்தே ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம். இது வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய்ச் சிக்கல்களை சரி செய்யும் வயிறு கனம் குறைந்து நன்றாகச் சிறுநீர் வெளியேற உதவும்.

மேற்கூறிய சிக்கல்கள் உள்ளவர்கள் மேலே குறிப்பிட்ட விதத்தில் கருஞ்சீரகத்தை பயன்படுத்தி வருவதினால் அந்த சிக்கல்கள் காலப்போக்கில் குணமடைந்து விடும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!