உலகத்தினை அனுபவிக்க உங்கள் கண்களின் அவசியத்தினைப் புரிந்து கொண்டு பின்வரும் உணவு வகைகளைச் சாப்பிடுங்கள்.!

#ஆரோக்கியம் #கண்கள் #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Eye #Antoni #Theva #Antoni Thevaraj
உலகத்தினை அனுபவிக்க உங்கள் கண்களின் அவசியத்தினைப் புரிந்து கொண்டு பின்வரும் உணவு வகைகளைச் சாப்பிடுங்கள்.!

உலகில் காணப்படும் சகலவற்றினையும் நாம் கண்டு களிக்க நமக்கு கண் இருந்தாலே அது சாத்தியமாகும். கண்ணின் ஆரோக்கியம் எவ்வளவோ அவ்வளவிற்கு நாமும் கண்டு களிக்கலாம் எதனையும். ஆகையால் நமக்கு கண்ணின் ஆரோக்கியம் எத்தனை வயதானாலும் சிறப்பாக இருக்க கண் நரம்புகள் பலம் பெற உணவுகள் என்னென்ன வென்பதை இனி நாம் காணலாம்.

தண்ணீர்:

தினமும் நாம் உண்ணும் உணவுடன் தினமும் பருக வேண்டிய  அளவிற்கு சரியான அளவில் தண்ணீர் குடிப்பதும் முக்கியம். ஏனென்றல் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடிப்பதன் மூலம் கண்களுக்கு தேவையான திரவம் கிடைத்து கண் நரம்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

கேரட்

கேரட்டில் எண்ணற்ற சத்துக்களும் இருந்தாலும் கூட அதில் காணப்படும் வைட்டமின் A மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் கண்ணிற்கு மிகவும் அவசியமானதாகும்.
இத்தகைய வைட்டமின் A சத்தானது நமது கண்ணில் ரோடாப்சின் என்ற புரதத்தை சுரக்க செய்த கண் பார்வையினை சிறப்பாக்க உதவுகிறது. அதனால் நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டில் கேரட் சேர்த்துக்கொள்வது நல்லது.

மீன்

கணிணியை நாம் அதிகநேரம் பயன்படுத்துவதால் நமது கண் வறட்சியுடன் காணப்படும். ஆகாயல் இவற்றை சரி செய்வதற்கு ஒமேகா 3 அமிலம் நிறைந்த மீன்களை நாம் எடுத்துக்கொள்வது நமது கண்ணிற்கும் மற்றும் கண் நரம்பிற்கும் மிகவும் நல்லது.

இந்த மீன்களில் கானாங்கெளுத்தி மீன், மத்தி மீன், நெத்திலி மீன், சூரை மீன் மற்றும் சால்மன் மீன் போன்ற மீன்களில் ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்து இருக்கிறது. நீங்கள் மற்ற மீன்களை சாப்பிடும் போதும் இந்த மீன்களையும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

உலர் உணவுப்பொருட்கள்:

நாம் தினமும் சாதாரணமாக சாப்பிடும் உலர் உணவு பொருட்கள் எண்ணற்ற நோய்களுக்கு ஒரு மருந்தாக பயன்படுகிறது. அதில் ஒன்று தான் கண் நரம்பும். உலர்ந்த திராட்சை, முந்திரி, வால்நெட் மற்றும் பாதாம் இதுபோன்ற பொருட்களில் உள்ள வைட்டமின் E மற்றும் ஒமேகா 3 அமிலங்கள் கண் நரம்பினை பலம் பெற செய்த பார்வையினை நன்றாகதெரிய வைக்கிறது. 

சக்கரவல்லி கிழங்கு:

சக்கரவல்லி கிழங்களிலும் வைட்டமின் A சத்து நிறைந்து இருக்கிறது. அதனால் நாம் தினமும் வேறு கிழங்கு வகைகளை விட சக்கரவல்லி கிழங்கு சாப்பிடுவது தான் மிகவும் நல்லது. ஆகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை எடுத்துக்கொண்டால் நம்முடைய கண் நரம்புகள் பலம் பெறும்.

மேலும் வைட்டமின் சீ நிறைந்த உணவு 500கிராம், வைட்டமின் ஈ நிறைந்த உணவு 400கிராம், ஜிங் ஒன்சைடு 80 மில்லி கிராம், காப்பர் ஆக்சைடு 2 மில்லி கிராம், இரும்பு சத்து 2 மில்லி கிராம் என தினமும் இந்த அளவில் உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் கண் நோய் எதுவும் வராமல் தடுத்து பாதுகாப்பாக வாழலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!