வாய்ப்புண் ஏற்பட்டால் அதனை நீண்ட காலம் இருக்காது குணமாக்கும் முறைகள்.
#ஆரோக்கியம்
#புற்றுநோய்
#அன்டனி
#தேவராஜ்
#அன்டனி தேவராஜ்
#Health
#Antoni
#Theva
#cancer
#Antoni Thevaraj
Mugunthan Mugunthan
1 year ago
வாய்ப்புண்ணானது ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாகவே வருகிறது. இந்த வாய்ப்புண் உதடு, நாக்குகளில் ஏற்பட்டு ஒழுங்காக சாப்பிட முடியாமல், பேச முடியாமல் போகிறது.
இதனால் நம் வாயில் சில அசௌகரியங்களை அனுபவிக்க வேண்டிவரும். எனவே இந்த வாய்ப்புண் எதனால் வருகிறது..? அதை தடுக்க நாம் என்னென்ன செய்ய வேண்டும்..? என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
வாய்ப்புண் வருவது சாதாரணமான ஒன்றாக இருந்தாலும் அதை கவனிக்காமல் விட்டு விட்டால் அது வாய்ப்புற்று நோய்க்கு இட்டுச் செல்லலாம். இந்த வாய்ப்புண் வந்தால் 7 லிருந்து 10 நாட்களுக்குள் தானாகவே சரியாகிவிடும். அப்படி சரியாகாமல் நீண்ட நாட்களுக்கு இருந்தால் புற்று நோயாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
வாய்ப்புண் வராமல் தடுக்க நாம் செய்ய வேண்டிடும்:
- முதலில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்து கொண்டு கட்டாயமாக அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.
- நமது உடலில் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் வரமால் இருக்க யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும்.
- நம் உடலில் மலச்சிக்கல், ஜீரண கோளாறு போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் நம் வாய் பகுதியை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
- வாய்ப்புண் உள்ளவர்கள் பாலில் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மட்டுமின்றி வயிற்றுப்புண்ணும் சரியாகிவிடும்.
- வாயில் புண் உள்ள இடத்தில், சிறிதளவு வெண்ணெய் அல்லது தேனை தடவி வந்தால் வாய்ப்புண் குணமடையும்.தண்ணீரில் நெல்லிக்காய் இலையை போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் சரியாகும்.
- மாசிக்காயை பால் சேர்த்து அரைத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவி வந்தால் வாய்ப்புண் விரைவில் குணமடையும்.
- பச்சரிசியுடன் சிறிதளவு பாசிப்பயிறு, வெந்தயம், பூண்டு சேர்த்து வேக வைத்து அதனுடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
- மணத்தக்காளி கீரை மற்றும் அகத்திக்கீரையுடன் தேங்காய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வர வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
- புதினா இலையை அரைத்து அதிலுள்ள சாற்றை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவினால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.