குழந்தைகளுக்கு காலை எழுந்தவுடன் கொடுக்கக்கூடிய நீராகாரங்கள் இவையேயாகும்.
குழந்தை காலையில் எழுந்தவுடன் பொதுவாக டீ அல்லது காபி போன்ற பானங்களை கொடுத்தல் மிகவும் தவறான பழக்கம். பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் மீதமோ, அதன் தாக்கமோ மறுநாள் காலை வரை நம் வயிற்றுக்குள் இருக்கும்.
மேலும் ‘ஹைட்ரோகுளோரிக் அமிலம்’,காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும்.
குறிப்பாக நம்முடைய உடலைவிட, குழந்தைகளுக்கு ஜீரணமடைதல் தாமதமாகும். அதனால் குழந்தைகளுக்கு கண்டிப்பாக காபியோ டீயோ கொடுக்கக்கூடாது.
தண்ணீர்:
ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும்.
தண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இருக்க உதவுகிறது.
வெந்தய நீர்:
வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து குடிக்க கொடுக்கவேண்டும்.
வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். அதோடு குழந்தைகளுக்கு அப்படியே சாப்பிடப் பிடிக்காது.
அருகம்புல் சாறு:
அல்சருக்கு அருமருந்தே, வெறும் வயிற்றில் பருகும் அருகம்புல் சாறுதான். அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது.
நெல்லிக்காய்ச் சாறு:
தினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும்.
சீரக தண்ணீர்:
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குழந்தைகளுக்குக் குடிக்கக் கொடுத்தால் தொண்டை பிரச்னைகள், சளி தொல்லைகள் உண்டாகாமலும் உடலின் அதிக வெப்பத்தால் உணடாகும் வயிற்றுவலியும் குறையும்.
நீராகாரம்:
மற்ற எல்லா பானங்களையும் விட நீராகாரம் வெறும் வயிற்றில் குடிப்பதற்கு மிகமிக உகந்தது. தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்தம் குறையும்.
இது செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஞாபக சக்திக்கும் உதவுகிறது. உடலை குளிர்ச்சியாக வைப்பதோடு, உடல் கழிவுகளை வெளியேற்றுகிறது. இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
இவற்றை நீங்கள் குழந்தைகளுக்கு ஏற்றவாறு மாறி மாறி குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ ஆலோசனையுடன் கொடுத்தல் அவர்களுக்குச் சிறந்தது.