சைவ உணவுப்பிரியர்களின் இறைச்சியான சோயா மீற்றை அதிகம் உட்கொள்வதால் ஏற்படக்கூடிய தீமைகள்.
#ஆரோக்கியம்
#உணவு
#அன்டனி
#தேவராஜ்
#அன்டனி தேவராஜ்
#Health
#meal
#Antoni
#Theva
#Antoni Thevaraj
Mugunthan Mugunthan
1 year ago
இறைச்சி வகைகள் சாப்பிடாதவர்கள் தனியே மரக்கறி மட்டும் சாப்பிடுபவர்கள் அவர்களுக்கு ஏதும் இறைச்சி போன்றிருக்கும் ஒரு வகை சோயாப் புரதமே சோயா மீற்றாகும். இங்கு மீற் எனப்படுவது ஆங்கிலத்தில் இறைச்சி என்பதாகும்.
இந்த சோயா மீற்றானது சைவ பிரியாணி, சோயா மீற் குருமா, சோய மீற் வறுவல் போன்று பலவிதமாக சமைக்கப்படுகிறது. இந்த சோயா மீற்றை தற்போது இறைச்சி உண்பவரும் அவரோடு ஏனையோரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அந்த வகையில் சோயா மீற்றில் இருக்கும் தீமைகள் என்ன என்று இன்று தெரிந்து கொள்வோம்.
சோயா மீற் தீமைகள்:
- சோயா மீறிறை குழந்தைகள் அதிகளவு சாப்பிட்டால் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடலில் பல ஒவ்வாமைகளை ஏற்படுத்துகிறது. அதனால் குழந்தைகளுக்கு சோயா மீற் அதிகமாக கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
- சோயா மீற் அதிகமாக சாப்பிடுவது புற்றுநோய் செல்கள் அதிகளவு உற்பத்தியாக வழி செய்கிறது.
- சோயா மீற் நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்துகிறது.
- இது தொண்டையில் சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
- சோயா மீற் கனிம குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
- இதனை அதிகமாக எடுத்து கொள்ளும் போது புரத செரிமானத்தைத் தடுக்கிறது.
- சோயாவில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் என்ற வேதிப்பொருள் உள்ளது. அது சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகிறது.
- இதை அதிகளவு உட்கொள்ளும் போது சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்ப காலத்தில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சோயா மீற் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப எதையும் நாம் அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு கேடு இல்லை. அதே போன்று சோயா மீற்றையும் அதிகம் நம் உணவில் சேர்க்காது அளவோடு இருந்தால் அது உடலுக்கு ஒரு புரதச்சத்தேயாகும்.