சாதாரணமாக உட்கொள்ளக் கூடிய சிறந்த மீன்வகைகளும், மீணுணவால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்.
மாமிச வகைகளில் உடலுக்கு, மிகவும் முக்கியமாக மூளையின் ஆரோக்கியத்திற்கு சிறந்த மாமிசம் மீன் மாமிசமாகும். இதிலுள்ள புரதம் சில வேளைகளில் நடலுக்கு தீங்கும் விளைவிக்க வல்லது. இன்றைய பதிவில் நாம் மீனைச் சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மை, தீமைகளை ஆராய்வோம்.
மீனில் உள்ள சத்துக்கள்:
மீனில் புரோட்டின், வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன.
மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
மூளைக்கு சிறந்த உணவாக மீன் சொல்லப்படுகிறது. அதனால் வாரத்தில் ஒரு முறையாவது மீனை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். கண் பார்வையில் பிரச்சனை இருப்பவர்கள், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மீனை வாரத்தில் இரண்டு முறை சேர்த்து கொள்ளலாம்.
மேலும் மீன்களில் உள்ள ஒமேகா புரதம் இதயத்திற்கு இதமானது. மேலும் ஞாபக சக்தி அதிகரிக்க, நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் மீன் சாப்பிடுவது நல்லது.மீனில் இருக்கும் எண்ணெய் சத்து சருமம் பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
மீன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
மீனை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் மூளை மற்றும் கண்களில் பிரச்சனை ஏற்ப்பட வாய்ப்புள்ளது. விரைவாக செரிமானம் ஆகாத மீன்கள் புற்று நோய் பிரச்சனையை ஏற்படுத்தும். அத்துடன் அதிகம் சாப்பிட்டால் மன அழுத்தம் பிரச்சனை அதிகரிக்கும்.
இதை விட உடலில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும். இதனால் அதிக மீணுணவு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல.
கீழ்வரும் மீன்கள் உடலுக்கு பெரும்பாலும் தீங்கேற்படுத்தாது.
- சால்மன்
- மத்தி
- ரெயின்போ ட்ரவுட்
- கோஹோ சால்மன்
- நெத்திலி
- கானாங்கெளுத்தி