நம் கிராமங்களில் மலிந்து காணப்படும் பூவரசு மரத்தின் மருத்துவ குணங்களைப்பற்றி தெரியுமா உங்களுக்கு?

#ஆரோக்கியம் #மூலிகை #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #herbs #Antoni #Theva #Antoni Thevaraj
நம் கிராமங்களில் மலிந்து காணப்படும் பூவரசு மரத்தின் மருத்துவ குணங்களைப்பற்றி தெரியுமா உங்களுக்கு?

நம் கிராமங்களில் பூவரசு மரத்தைக் காணாதவர்கள் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அம்மரம் எங்கும் வீடுகளில் காணப்படும். இதன் இலையில் நாதஸ்வரம் போன்று செய்து ஊதி சிறுவயதில் விளையாடிது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும்.

இந்த பூவரசு மரத்தின் மருத்துவ குணங்கள் என்னவென்று தெரிந்தவர்களோ மிகவும் குறைவு. இன்றைய பதிவில் நம் முன்னோர்களால் கொண்டு வரப்பட்ட இந்த பூவரசு மரத்தின் மருத்துவ குணங்களை ஆராயலாம்.

  • இந்த பூவரசு மரம் அதிக அளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்வதினால் நாம் இந்த மரத்தினை நமது வீடுகளில் வைத்திருப்பதின் மூலம் நம்மால் நல்ல தூய காற்றை சுவாசிக்க முடியும்.
     
  • இதன் இலைகளை பறித்து நன்கு சுத்தம் செய்து அதனை நன்கு பசைபோல் அரைத்து உங்கள் உடலில் உள்ள தேமல்களின் மீது தடவி வருவதன் மூலம் தேமல் குணமாகும்.
     
  • அடுத்து இதன் காய்களை அரைத்தும் கூட உங்கள் உடலில் உள்ள தேமல்களின் மீது தடவி வருவதன் மூலம் தேமல்கள் குணமாகும் என்று கூறப்படுகிறது.
     
  • நமது உடலில் அடிகாயங்களால் உண்டாகும் வீக்கங்களுக்கும் இதன் காய்களை அரைத்து தடவினால் வீக்கம் வற்றும்.
     
  • தோல்களில் காணப்படும் செதில் போன்ற தோல் உதிர்வு உள்ளவர்கள் இந்த மரத்தின் பட்டைகளை உரித்து அதனை தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து தொடர்ந்து  தடவி வருவதன் மூலம் 28 நாட்களில் தோல்களில் ஏற்படும் வறட்சி குணமாகும்.
     
  • அதேபோல சர்க்கரை நோயாளிகளுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் அது குணமாகவே ஆகாது என்று கூறுவார்கள். அவர்களும் இந்த பூவரசு மரத்தின் பட்டையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வைத்து புண்கள் உள்ள இடங்களை கழுவி வருவதன் மூலம் அந்த புண்கள் குணமாகும்.
     
  • பொதுவாக பெண்களுக்கு கழுத்தில் நகைகள் அணிவதினால் கருப்பு நிறத்தில் இருக்கும். அதற்கு இந்த பூவரசு மரத்தின் பூக்களை நல்லெண்ணெயுடன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை வடிக்கட்டி அந்த எண்ணெயை தடவி வருவதன் மூலம் நகைகளால் வரும் கருப்பு நிறம் மறைந்து விடும்.

இந்த பூவரசு மரத்தில் மேலும் பல நன்மைகள் காணப்படும். ஆகையால் நம் பாரம்பரிய மண்வாசனை அழியாது இருக்க இன்னும் பல பூவரசு மரங்களை நம் வீட்டு வேலியோரங்களில் வளர்ப்போமாக.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!