புடலங்காய் சாதாரண காய்கறியல்ல, அது ஒரு மூலிகை என அறிந்து கொள்ளுங்கள்.
சந்தைக்குச் சென்றால் நாம் பார்த்திருப்போமே பச்சை நிறத்தில் மிகவும் நீண்டதான ஒரு வகை பாம்பு போன்ற காய் அதுவே புடலங்காய் ஆகும். இதனை பெரும்பாலானோர் சமைப்பதில்லை. ஆனால் இது உண்மையில் எவ்வளவு ஆரோக்கியம் நிறைந்ததென்பதை இன்று பார்க்கலாம்.
புடலங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
புடலங்காயில் வைட்டமின் சத்துக்கள் பல நிறைந்து காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இதில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, அயோடின், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
வயிற்று கோளாறுகளுக்கு:
புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் வயிறு சம்மந்தப்பட்ட கோளாறுகளான வயிற்றுப்போக்கு, அஜீரண கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
மேலும் இது பசி உணர்வை தூண்டுகிறது. அதுபோல இது குடல் புண், வயிற்றுப்புண் மற்றும் தொண்டைப் புண் போன்ற பாதிப்புகளை குணப்படுத்துகிறது.
எலும்பு ஆரோக்கியத்தை சீர்படுத்த:
புடலங்காய் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படுகிறது. இதில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் இது எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கிறது. அதுபோல மூட்டுவலி, எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
உடல் நிறையை குறைக்க:
புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால், உடலில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. மேலும் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைக்கிறது. அதனால் உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
சிறுநீரக கற்கள் கரைய:
புடலங்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் இது உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை மூலம் வெளியேற்ற உதவுகிறது. அதுபோல புடலங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சிறுநீரக கற்கள் கரைக்க உதவுகிறது.
இத்தகைய உடற்பிரச்சினைகளை தீர்க்க வல்ல இந்த புடலங்காயை ஏன் நாமும் இனிமேலும் சேர்க்கக்கூடாது. புடலங்காயில் இருக்கும் ஆரோக்கியத்திற்காகவேனும் நாம் அதனை வாங்குவோம்.