உலர்திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை குடிப்பதால் எவ்வளவு உடற்குறைகள் நீங்குகிறது தெரியுமா?
உலர் திராட்சையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளமையை நீங்கள் அறிவீர்கள். ஆனால் உலர்திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து அதன் தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பயன்களை ஆராயலாம் வாருங்கள்.
கல்லீரலை பலப்படுத்துவதற்கு:
உலர்திராட்சையை ஊறவைத்த தண்ணீரை தினமும் காலை வெறும் வயிற்றில் குடிப்பதால் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, இரத்தத்தை நன்கு சுத்திகரிக்க உதவுகிறது.
நோய் எதிர்க்கும் சக்தியதிகரிக்க
இரவு முழுவதும் உலர் திராட்சை ஊறவைக்கப்பட்ட தண்ணீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், அதனை தினமும் காலை வெறும் வயிற்றில் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்த உதவுகிறது.
இதயத்திற்கு நல்லது:
இரவு முழுவதும் உலர் திராட்சை ஊறவைக்கப்பட்ட தண்ணீர் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுவதால், அதனை தினமும் காலை வெறும் வயிற்றில் குடிப்பதால் உங்களுடைய இதயம் நன்கு ஆரோக்கியத்துடன் இயங்க உதவுகின்றது. மேலும் உடலில் படிந்துள்ள கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது.
புற்றுநோயைத் தடுக்கும்:
உலர் திராட்சை ஊறவைக்கப்பட்ட தண்ணீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாக்க உதவுகிறது.
இரும்புச்சத்து குறைபாட்டை தடுப்பதற்கு:
உலர் திராட்சை ஊறவைக்கப்பட்ட தண்ணீரில் அதிக இரும்புச்சத்து உள்ளதால் அது நமது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், இரத்த சோகையை மற்றும் இரும்புச்சத்து குறைபாட்டையும் நீக்குகிறது.
எலும்புகளை பலப்படுத்துவதற்கு:
உலர் திராட்சை ஊறவைக்கப்பட்ட தண்ணீரில் உள்ள அதிக அளவு போரான் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இந்த தண்ணீரில் எலும்புகளுக்கு தேவையான கால்சியமும் உள்ளது.
உடல்எடை குறைக்க உதவுகிறது:
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த உலர் திராட்சை ஊறவைக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதால் உடல் எடையை குறைகிறது. இதில் உள்ள பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைகிறது.
அமில சுரப்பை சீராக்குகிறது:
நீங்கள் அசிடிட்டி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர் என்றால், உலர் திராட்சை தண்ணீரை குடிப்பது உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு ஒழுங்குபடுத்தப்படுத்த உதவும்.
மேற்கூறிய குறைபாடுகள் உங்களுக்கு இருப்பின் இந்த முறையைக் கையாண்டு காலக்கிரமத்தில் அவற்றை நிவர்த்தி செய்யுங்கள்.