நமது உணவின் பின் பழங்கள் எடுக்கலாம். ஆனால் பழங்களின் பின் தண்ணீர் அருந்துவது நல்லதா?
சாப்பாடு சாப்பிட்ட பின் வழக்கமாக நாம் பழங்கள் சாப்பிடுவது வழக்கம். இவ்வாறு பழங்கள் சாப்பிட்ட பிற்பாடு தண்ணீர் அருந்துவது குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ தேவையாக இருக்கும். எது எவ்வாறாயினும் பழங்களுக்குப்பின் யாரும் தண்ணீர் அருந்தலாமா கூடாதா என்பதே இன்று நாம் பார்க்கவிருக்கிறோம்.
பழங்களைச் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது நமது உடலுக்கு நல்லது இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காரணம் பழங்களில் நிறைய சர்க்கரை மற்றும் ஈஸ்ட் உள்ளது. எனவே பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உங்கள் வயிற்று பகுதியில் இருக்கும் அமிலத்தை நீர்த்துப்போகச் செய்கிறது.
நீங்கள் தண்ணீர் அதிகம் உள்ள பழங்களான வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால், இது அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மையின் அளவை சீர்குலைக்கிறது. இது செரிமான அமைப்பின் pH அளவை சிதைக்கிறது.
இத்தகைய பழங்கள் உங்கள் வயிற்றின் அமிலத்தன்மையை குறைத்து pH அளவை மாற்றுகின்றன. அதனால் பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பழங்கள் சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தண்ணீர் குடிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
எனவே நீங்களும் பழங்கள் உண்டபின் தண்ணீர் அருந்துவதனை பழக்கமாக வைத்திருந்தால் அதனை இனிமேல் செய்யாதீர்கள்.