சளி, இருமலைப் போக்கும் தூதுவளை

#Health #Healthy #Disease
Mani
1 year ago
சளி, இருமலைப் போக்கும் தூதுவளை

தூதுவளையானது இந்தியாவில் எங்கும் பயிராகும் ஒரு வகைக் கொடி. இதில் சிறு முட்கள் காணப்படும். இதன் வேர், காய், இலை, பூ என அனைத்தும் மருத்துவ பயன்கள் உடையது.  இதில் ஊதா நிறப் பூக்கள் உடையது மற்றும் வெள்ளை நிறப் பூக்கள் உடையது என்று இரு முக்கிய வகைகள் உள்ளன.இது தூதுவளை, அளர்க்கம், சிங்கவல்லி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

தூதுவளை இலை உணவுக்குச் சுவை தரும். இதன் பூ - ஆண்மையைப் பெருக்கும். இதன் காய் - முக்குற்றங்களையும் வாதம், பித்தம், கபம் நீக்கும். இதன் வேரும், கொடியும் இருமல், இரைப்பு முதலிய ஐயப்பணிகளைப் போக்கும்.

தூதுவேளையை கற்பமுறையாகவேனும் கறியாகவேனும் உட்கொண்டு வர, உடலில் ஐயத்தால் ஏற்பட்ட நோய்கள் யாவும் நீங்கும்.

வயிறு மந்தம், வயிறு கோளாறு இருப்பவர்கள், வாயுப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் காலை அரை டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தூதுவளைப் பொடியை கலந்து குடித்து வந்தால் வயிறு பிரச்சனைகள் குணமாகும்.தூதுவளை இலைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து கஷாயமாக அருந்த சுரம் நீங்கும்.தூதுவளை இலைகளை நெய்யோடு சேர்த்து காய்ச்சி எடுத்த நெய்யை, மருந்தாக கொடுத்து வர சளி, இருமல் நோய்கள் தீரும்.இதன் இலைகளைப் பிழிந்து காதில் விட காதடைப்பு, காதெழுச்சி போகும்.

தூதுவளை மலர்களை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுப்பெறும். உடல் பெருக்கம், பெண் வசியம் உண்டாகும்.தூதுவளைக் காயைப் பறித்து மோரில் ஊற வைத்து வற்றலாக்கி உண்டுவர வாத நோய், பித்தநோய், காபநோய்கள் முதலியன அணுகாது. தூதுவளைப் பழங்களை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் மலச்சிக்கல் போகும். மார்புச் சளி, இருமல், முக்குற்றங்கள், நீரேற்றம் போகும். பாம்பு நஞ்சு தீரும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!