காலைப்பொழுதில் வெறும் வயிற்றில் நாம் எத்தகைய உணவை உண்ணுதல் ஆரோக்கியம்.

#ஆரோக்கியம் #உணவு #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Food #Antoni #Theva #Antoni Thevaraj
காலைப்பொழுதில் வெறும் வயிற்றில் நாம் எத்தகைய உணவை உண்ணுதல் ஆரோக்கியம்.

காலைப்பொழுது விடிந்து நாம் எழும்பும் போது நமது வெறும் வயிற்றில் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்ற சிந்தனை நமது மனதில் எழும். இதற்கு தீர்வாகவே இன்று நாம் காலையில் வெறும் வயிற்றில் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.

வெறும் வயிற்றில் சாப்பிட கூடிய உணவு வகைகள்

  • தேன் 
  • பாதாம் 
  • பப்பாளி 
  • தர்பூசணி 
  • பச்சை பயிறு 
  • சியா விதைகள் 
  • பழைய சாதம்

வெறும் வயிற்றில் தேன்:

தினமும் காலையில் எழுந்ததும் 1 ஸ்பூன் தேனை சூடு தண்ணீரிலில் கலந்து குடிக்கவும். இது மாதிரி தேனை வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் ஆற்றலை அதிகரிக்க செய்து தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றம் செய்யும்.

வெறும் வயிற்றில் பாதாம் 

பாதாமை தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் பாதம் மேல் உள்ள தோலை நீக்கி விட்டு வெறும் வயிற்றில் பாதாமை மட்டும் சாப்பிட வேண்டும். வெறும் வயிற்றில் பாதாம் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.

வெறும் வயிற்றில் பப்பாளி 

காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி செரிமான பிரச்சனை, மலசிக்கல் மற்றும் குடல் இயக்கத்தை சரியாக இயங்க செய்வது போன்ற அனைத்திற்கும் சிறந்த பலனை தரும்.  அதுபோல பப்பாளி இதயத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடியதாகவும் இருக்கிறது.

தர்பூசணி:

வெறும் வயிற்றில் தர்பூசணி கோடை காலத்தில் அனைவரும் சாப்பிடுவதற்கு சிறந்த ஒரு பழம் ஆகும் . இந்த தர்பூசணியில் 90 சதவிகிதம் நீர்சத்து இருப்பதால் காலையில் வெறும் வயிற்றில் கோடை காலத்தில் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

பச்சை பயறு:

பச்சை பயறு அப்படியே சாப்பிடாமல் முளைகட்டிய  பிறகு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனால் முளைகட்டிய பச்சை பயிரில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் B, வைட்டமின் C மற்றும் வைட்டமின் K போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படும். இந்த சத்துக்கள் அனைத்தும் உடலை ஆரோக்கியமாக வைக்கவும் தேவையில்லாத கழிவுகளையும் வெளியற்றவும்  உதவுகிறது.

சியா விதைகள்:

சியா விதையில் புரோட்டீன், கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. அதனால் சியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து அதன் பிறகு தண்ணீரில் கலந்தோ அல்லது பழத்தின் மீது தூவியோ வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். சியா விதைகளை இப்படி சாப்பிடுவதால் உடல் எடை குறைவு மற்றும் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்கவும் பயன்படுகிறது. 

பழைய சோறு 

சோறு மிஞ்சி விட்டால் அதில் தண்ணீரில் ஊற்றி மறுநாள் காலையில் அதனை பழைய சோறாக சாப்பிடுவார்கள். அத்தகைய பழைய சாதத்தில் பலவகையான சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் பழைய சாதம் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தக்கூடியது.

ஆகவே காலையில் நாம் இத்தகைய உணவு வகைகளை மனதிற்கொண்டு உண்டு நமது நாளை உற்சாகமாகவும் வீரியமாகவும் தொடங்குவோமாக.

​​​​​​​

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!