பன்னீர் அதிகம் சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் கேடு பற்றிய விளக்கம்.
பன்னீர் பசுப்பாலில் இருந்து பெறப்படுகிறது. இதனை பல விதமாக செய்து சாப்பிடுவார்கள். பாலில் இருந்து பெறப்படுவதால் உடலுக்கு நன்மையானது. இதற்காக தினமும் அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு தீங்கை ஏற்படுத்த கூடும்.
இன்றைய பதிவில் அதிகமாக பன்னீர் சாப்பிட்டால் உடலுக்கு உண்டாகும் தீமைகள் குறித்து பார்க்கலாம்.
சமிபாட்டுப் பிரச்சனை:
பன்னீரில் லாக்டோஸ் அதிகமாக இருப்பதால் வாயுவை ஏற்படுத்தும். மேலும் சமிபாட்டு பிரச்சனை மற்றும் வயிற்று வலி பிரச்சனை ஏற்படும். பன்னீரில் புரதம் அதிகம் இருப்பதால் சமிபாடடைய நீண்ட நேரம் எடுத்து கொள்ளும்.
இதய பிரச்சனை:
உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் பன்னீர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் பன்னீரை அதிகமாக சாப்பிடும் போது அதில் காணப்படும் கொழுப்பால் இதய பிரச்சனையை ஏற்படுத்தும்.
உடல் எடை அதிகரிக்க:
நீங்கள் உடல் எடையை குறைக்க நினைக்கிறீர்கள் என்றால் பன்னீர் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். ஏனென்றால் பன்னீர் உடல் எடையை அதிகப்படுத்தும்.
ஒவ்வாமை
பன்னீர் சாப்பிடுவது சில நபர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இதனால் ஒரு சிலருக்கு அரிப்பு, தோல் சிவந்த நிறமாக காணப்படுதல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
எனவே பன்னீரை நாம் தினமும் சாப்பிடாது குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிடுவதனால் தீமையை உடலுக்கு ஏற்படுத்தாது.