உடன் உணவுவகையான நுாடில்ஸை சாப்பிடுவதால் உண்டாகும் தீமைகள்!
#ஆரோக்கியம்
#அன்டனி
#தேவராஜ்
#அன்டனி தேவராஜ்
#உணவு
#Health
#Antoni
#Theva
#Antoni Thevaraj
#Food
Mugunthan Mugunthan
1 year ago
நுாடில்ஸை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் விசேட முறையில் தயாரிக்கப்பட்ட கொத்து நுாடில்ஸ் போன்றவை சுவையதிகமாகவும் நிறமூட்டிகளும் கலந்து தயாரிப்பதால் விட மாட்டார்கள். அதிலும் சில நிமிடங்களில் சமைக்க கூடியதாகவும் இருப்பதால் அனைவரும் அவசரத்திற்கு சாப்பிடுவார்கள்.
இந்த நுாடில்ஸை சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் தீங்குகள் குறித்து இன்று நாம் பார்க்கலாம்.
- நூடுல்ஸில் நார்ச்சத்துக்களும், புரோட்டீன்களும் மிக குறைவாக இருப்பதால் இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவைக்க கூடியவையாகும்.
- இது பதப்படுத்தப்பட்ட உணவாக இருப்பதால் அதனை நாம் சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்க செய்யும்.
- நூடில்ஸை தொடர்ந்து நாம் சாப்பிட்டால் குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் வரும்.
- இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்து சர்க்கரை நோய் வருவதற்கு இந்த நூடுல்ஸ் காரணமாக இருக்கிறது. ஏனென்றால் நூடுல்ஸில் கோதுமை மாவும் கலந்து இருப்பதால் அதனை அதிகமாக சாப்பிட கூடாது.
- இத்தகைய நூடுல்ஸை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது ஒரு கட்டத்திற்கு மேல் உடலில் மலசிக்கல் பிரச்சனையை வர செய்யும். மேலும் அது மலக்குடல் புற்றுநோயக மாறும் வாய்ப்பும் இருக்கிறது.
- கர்ப்பிணி பெண்கள் நூடுல்ஸை சாப்பிட கூடாது. ஏனென்றால் அது வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது கிடையாது.
- நூடுல்ஸ் சாப்பிடும் போது ஒட்டாமல் தனி தனியாக பிரிந்து இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில நூடுல்ஸில் பாராஃபின் மெழுகு என்ற திடப்பொருள் கலந்து செய்யப்படுகின்றன.