உடல் சூட்டை தணிக்கும் எண்ணெய்கள்!
நல்லெண்ணெய் :
வாரம் ஒருமுறை தலைக்கு நல்லெண்ணெய்யை தேய்த்துக் குளித்துவர, உடல் உஷ்ணம் குறைந்து, உடல் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
விளக்கெண்ணெய்:
இரவு தூங்கும் முன் உள்ளங்காலில் விளக்கெண்ணெய் தேய்த்துவிட்டு தூங்கினால் உடல் சூட்டைத் தணிக்கலாம் அல்லது வாரத்தில் இருமுறை இரவு உறங்குவதற்கு முன் தொப்புளில் இரு துளிகள் விளக்கெண்ணெய் வைத்துவிட்டு உறங்கலாம். இவ்வாறு செய்வதினால் உடல் சூடு நன்கு குறையும்.
தேங்காய் எண்ணெய்:
வெயிலில் அதிகம் அலையும் வேலையில் இருப்பவர்களும், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் அடிக்கடி உடல் உஷ்ணம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், இவர்கள் தினசரி தலையில் தேங்காய் எண்ணெய் தடவுவதைக் கட்டாயமாகப் பின்பற்றினால் உடல் உஷ்ணத்தைக் குறைக்கலாம்.
சந்தன எண்ணெய்:
வாரத்தில் ஒருமுறை சந்தன எண்ணெய்யை உடலில் தடவி ஊறவைத்துக் குளித்துவர உடல் சூடு தணியும்.