வாழைப்பழம் சிறந்த ஊட்டச்சத்துள்ள பழம். ஆனால் பெண்கள் சாப்பிடலாமா?
வாழைப்பழம் தெரியாத நபர் இல்லை என்றே கூறலாம். இது அனைவருக்கும் ஏற்ற ஒரு பழமாகும். வாழைப்பழத்தில் பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனினும் இது பெண்களுக்குகந்ததா என இப்பதிவில் பார்க்கலாம்.
வாழைப்பழம் சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்:
வாழைப்பழத்தில் பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள், கனிம சத்துக்கள், பொட்டாஷியம், கால்சியம் சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் இரும்புசத்து போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. அதிலும் விசேஷமாக எதற்கு பெண்களிற்கு சிறந்தது.
உடல் எடையை குறைக்க:
வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. வாழைப்பழம் சாப்பிடுவதால் பசி உணர்வு கட்டுப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
இதில் உள்ள நார்ச்சத்து கொழுப்புகளை நீக்கி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக்குகிறது. இதனால் உடல் எடை குறைகிறது.
உடல் சோர்வை போக்க:
பெண்கள் வாழைப்பழம் தினமும் சாப்பிட்டு வருவது நல்ல பலன் அளிக்கிறது. இது உடல் சோர்வை போக்குகிறது. வாழைப்பழம் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய உடல் சோர்வை போக்குகிறது.
வாழைப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் உடலில் இருக்க கூடிய சோர்வை போக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
சரும நோய்கள் வராமல் தடுக்க:
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் சரும நோய்கள் வராமல் தடுக்கிறது. சருமத்தில் வரக்கூடிய பருக்கள், கரும்புள்ளிகள், முகச்சுருக்கம் மற்றும் தோல் வறட்சி போன்ற சரும பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
மேலும் வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
குடல் கோளாறுகளை தடுக்க:
பெண்கள் வாழைப்பழம் சாப்பிடுவதால் குடல் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க முடியும். குடல் புண், வாய் புண், வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.