கத்தரிக்காயிலும் உடலுக்கு தீயதை விளைவிக்கும் கூறுகள் உள்ளதா?
மரக்கறிகளில் பெரும்பாலனா விருப்பைப் பெற்றது கத்தரிக்காய். கத்தரிக்காய் என்றால் போதும் அதில் என்ன விஷேச உணவு சமைக்கலாமோ அத்தனையும் சமைத்து உண்பர்.
ஆனால் இந்த கத்தரிக்காயில் உள்ள தீமைகள் என்ன என்று பார்ப்பதே இன்றைய இந்தப் பதிவு.
கத்தரிக்காய் தீமைகள்:
மாதவிடாய் காலத்தில் அதிக உதிர போக்கு உள்ள பெண்கள் அதிக அளவு கத்திரிக்காய் சாப்பிட கூடாது. ஏனென்றால் அளவுக்கு அதிகமாக கத்திரிக்காய் சாப்பிடும் போது மாதவிடாயின் போது வரும் உதிர போக்கை அதிகரிக்க செய்யும்.
சமிபாட்டுக் கோளாறு:
பெண்கள் மாதவிடாய்:
நாம் அளவுக்கு அதிகமாக கத்திரிக்காய் சாப்பிடும் போது சமிபாட்டுக் கோளாறு, நெஞ்சு எரிச்சல் மற்றும் வாயு தொல்லை போன்ற பிரச்சனைகள் வரும்.
கருவுற்ற பெண்கள்:
கத்திரிக்காயில் கருச்சிதைவை ஏற்படுத்தும் பண்பு இயல்பாகவே இருக்கிறது. அதனால் கருவுற்ற பெண்கள் மருத்துவரின் ஆலோசனை படி சரியான அளவு மட்டுமே கத்திரிக்காய் சாப்பிடுவது நல்லது. அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.
வயிறு பிரச்சனை:
கத்திரிகாயில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் போலிக் ஆசிட் இருப்பதால் இதனை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள கூடாது. எனவே இதனை அதிகமாக சாப்பிடும் போது மலச்சிக்கல், வாந்தி, வயிற்று போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் வரும் வாய்ப்பு இருக்கிறது.
சிறுநீரக பிரச்சனை:
இதில் அதிகளவு ஆக்சலேட் இருப்பதால் கத்திரிக்காயை நாம் அதிக அளவு சாப்பிடும் போது சிறுநீரக பிரச்சனை மற்றும் சீறுநீரக கல் போன்ற பிரச்சனைகள் வரும்.
கத்தரிக்காய் சிறந்த ஊட்டச்சத்துமிக்க மரக்கறிவகை என்றாலும் மேற்கூறிய வகைகளில் அது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது.