தேங்காய்ப் பூவின் சத்துக்கள்
தேங்காய்ப் பூவினை சிலர் ருசித்திருப்பார்கள். சாலையில் தள்ளுவண்டியில் அடுக்கி விற்கப்பட்டு வரும் தேங்காய்ப் பூவைப் பார்த்துக் கொண்டே ‘இது எதற்காக’ என்ற கேள்வியுடனே சிலர் கடந்து சென்றுகொண்டிருப்பார்கள். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தேங்காய், இளநீர் பயன்பாடு எல்லாம் பரவலாகவே இருக்கிறது. ஆனால், ‘தேங்காய்ப் பூ’ எதற்காக, என்ன பலன், வெறுமனே சுவை மட்டுமா போன்ற கேள்விகள் பலருக்கு இருக்கலாம்.
தேங்காய்ப் பூ உண்பதால் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்கவும் முடிகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவு கிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமல் வேகமாக உடல் எடையை குறைக்கவும் முடியும்.
தேங்காய்ப்பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்த இயலுகிறது. ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய்ப்பூ சிறந்த மருத்துவமாகும். இதிலுள்ள மினரல், வைட்டமின் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது.
இதயக் குழாய்களில் படிகிற கொழுப்புகள் மாரடைப்பையும் வேறு சில இதயம் தொடர்பான நோய் களையும் உண்டாக்குகிறது. இந்த கொழுப்பு தேங்கும் பிரச்னையை சரி செய்வதிலும் மிக சிறப்பாக தேங்காய்ப்பூ உதவுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் நேரம் தவிர வெள்ளைப்படுதல் இருப்பதால் இந்த தேங்காய்ப்பூவை உட்கொள்வதால் சீர் செய்ய உதவுகிறது. அதுமட்டுமின்றி அதிக நாள் மாதவிடாய் ரத்தப்போக்கை சரி செய்ய தேங்காய்ப்பூவை உபயோகிக்கலாம்.
பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய்ப்பூ கொடுக்கும். தைராய்டு பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய்ப்பூவை சாப்பிடுவதால் தைராய்டு சுரப்பை குணப்படுத்தலாம்.
இளநீர் மட்டுமின்றி தேங்காய்ப்பூவுக்கும் உடற்சூட்டை தணிக்கும் தன்மை உண்டு.