உயர் இரத்த அழுத்தத்தினை தினமும் சோதிக்காது இயற்கை முறையில் கட்டுக்குள் வைக்கவல்ல உணவுவகைகள்.
இரத்த அழுத்தம் குழந்தைகள் முதல் பெரியோர் வரைக்கும் வரக்கூடிய ஒரு தொற்றா நோயாகும். இதனால் அவர்களுக்கு இந்த இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இராவிட்டால் ஈற்றில் மரணம் சம்பவிக்கும். உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் போது நமது இரத்த நாளங்கள் சுருங்குவதை தடுக்கிறது.
இதில் உயர் இரத்த அழுத்தம் மற்று தாழ் இரத்த அழுத்தம் என இருவகையுண்டு. இதில் இந்த உயர் இரத்த அழுத்தமுள்ளவர்கள் சாப்பிடின் மூலம் அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க என்னென்ன உணவு வகைகளை உண்ண வேண்டும் என்பதே இன்றை பதிவில் நாம் காணவிருக்கிறோம்.
பீட்ரூட்:
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிறந்த உணவாக இருக்கிறது. இந்த பீட்ரூட்டை சாறாக தயார் செய்து 1 டம்ளர் குடித்தாலோ அல்லது உணவாக சமைத்து சாப்பிட்டாலோ நீங்கள் இதனை சாப்பிட்ட 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் உங்களுடைய உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று மருத்துவர்களால் சொல்லப்படுகிறது.
மாதுளை:
மாதுளைப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் பயோஆக்டிவ் பாலிபினால்கள் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க ஒரு மருந்தாக பயன்படுகிறது. அதனால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் காலையில் 1 மாதுளை பழம் சாப்பிடுதல் நல்லது.
பூண்டு:
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் சாப்பிடும் சாப்பிட்டில் பூண்டினை கட்டாயமாக சேர்த்து கொள்ள வேண்டும். இதனால் உயர்இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
வெந்தயம்
வெந்தயம் அல்லது வெந்தயக்கீரையில் உள்ள நார்ச்சத்து மற்றும் கால்சியம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அதனால் நாம் தினமும் சாப்பிடும் உணவுடன் வெந்தயத்தை சேர்த்துக்கொண்டால் அது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்க்குள் வைத்து நம்மை நலமுடன் வாழ வைக்கிறது.
நாவல்பழம்:
நாவல்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக்கட்டுப்படுத்தி உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்.
எனவே இந்த 5 உணவு வகையையும் தொடர்ந்து சாப்பாட்டுடன் சேர்த்து வருவதன் மூலம் இயற்கையான முறையிலும் உயர் இரத்தவழுத்தத்தினை சீராக்கலாம்.