திருமணமான பெண்களில் கருப்பையில் கரு தங்காதிருப்பதற்கான காரணங்கள்.
#ஆரோக்கியம்
#பெண்கள்
#அன்டனி
#தேவராஜ்
#அன்டனி தேவராஜ்
#Health
#Women
#Antoni
#Theva
#Antoni Thevaraj
Mugunthan Mugunthan
1 year ago
திருமணமான தம்பதியினருக்கும் திருமணமாக இருப்பவர்களுக்கும் ஒரு அரிய பதிவினை இன்று லங்கா4 தரவுள்ளது. அதாவது ஒரு கரு கருப்பையில் தங்காமல் போவதற்கு என்ன காரணம் என்பதை பற்றிய பதிவு தான் அது. சரி இனி விடயத்திற்கு வருவோம்.
கீழ்வரும் காரணங்களால் அல்லது காரணத்தினால் கரு கருப்பையில் தங்காது விடலாம்.
- ஒரு பெண்ணின் கருவில் ஆணின் விந்தணு சேரும்போது சரியான முறையில் குரோமோசோம் சேரவில்லை என்றால் கருக்கலைப்பு நடக்கிறது.
- பெண்ணின் கருவாய் பெரிதாக இருந்து உருவான கரு தங்கமுடியாமல் வெளியேறலாம்.
- அதிகமான எடை உள்ள பொருளை நீங்கள் குனிந்து தூக்கி இருந்தால் அந்த கரு கலந்திருக்கலாம்.
- தைராய்டு, நீர்க்கட்டி அதிகமாக இருந்திருந்தால் கரு தங்காமல் கலந்திருக்கலாம்.
- நீங்கள் புகை பிடிப்பது, மது அருந்துவது இது போன்ற பலன்களை கொண்டிருந்தாலும் கரு கலந்திருக்கலாம்.
- மருத்துவர்கள் அனுமதி இன்றி வேறு ஏதாவது மருந்து எடுக்கொண்டிருந்தாலும் அந்த கரு கலந்திருக்கலாம்.
- மாதவிடாய் நாட்கள் 40 நாள் தள்ளி போயிருந்து மீண்டும் உடலுறவு வைத்திருந்தால் கூட கரு தங்காமல் கலந்திருக்கலாம்.
- மாதவிடாய் நாள் தள்ளிபோன பிறகு அதிகளவு இனிப்பு சாப்பிட்டு இருந்திருந்தாலும் அது இரத்த போக்கை ஏற்படுத்திவிடும். இதன் காரணமாக கூட கரு கலந்திருக்கும். அதேபோல் அதிக காராம், வாயுத்தன்மை நிரம்பிய பானங்கள், ஐஸ்கிரீம் இது போன்றவற்றை தொடர்ந்து எடுத்துக்கொண்டிருந்தாலும் கரு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கும்.
- ஒரு பெண் கர்ப்பம் தரித்தவுடன் அதிகளவு சந்தோஷமும், பயமும் கலந்த ஒரு உணர்வு எப்போதும் இருக்கும் அதனால் திடீரென்று வயிற்று வலி வந்து இரத்த போக்கை ஏற்படுத்திவிடும். இதன் காரணமாக கூட கரு கலந்திருக்கலாம்.
- கருத்தரித்த நேரங்களில் அதிக நேரம் கார், பஸ் பைக் இது போன்ற வாகனத்தில் ட்ராவல் செய்திருந்தாலும் கரு கலைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.