ரம்பூட்டான் பழம் அடிக்கடி சாப்பிடுவதால் என்ன நன்மைகள்...?
நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் கனிகளின் பங்களிப்பு அளப்பரியது. அத்தகைய பழங்களில் ஒன்று ரம்பூட்டான். தற்போது பரவலாக எல்லா இடங்களிலும் விற்கப்படுகிற இதன் மருத்துவ குணங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.
ரம்பூட்டான் பழம் ஆசிய நாடுகளான மலேசியா மற்றும் இந்தோனேஷியாவைத் தாயகமாக கொண்டது. 100 கிராம் அளவு உடைய ரம்பூட்டானில், கலோரி 84%-மும், வைட்டமின்-சி 40%-மும், இரும்புச்சத்து 28%-மும் உள்ளது.
வித்தியாசமான பெயரையும், தோற்றத்தையும் கொண்ட ரம்பூட்டானின் மேற்புறம் முள்ளுமுள்ளாக காணப்படும். பழத்தின் உள்ளே இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்த வெண்மையான சதைப்பகுதி காணப்படும். பாதாம் பருப்பு அளவு விதை கொண்ட இப்பழத்தின் நறுமணம் சுண்டி இழுக்கும் தன்மை கொண்டது.
ரம்பூட்டானில் வைட்டமின்-சி ஏராளமாக இருக்கிறது. அதனால், உடல் பருமனைக் கட்டுப்படுத்த இப்பழம் பயன்படுகிறது. எனவே, உடல் பருமனால் அவதிப்படுவர்கள் ரம்பூட்டானை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் உடல் உழைப்புக்குத் தேவையான ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. உடல் சீரான வளர்ச்சி பெறுவதற்கு, இந்தப் பழம் முக்கிய பங்காற்றுகிறது.
உடலில் கெட்ட கொழுப்பு சேரவிடாமல் ரம்பூட்டான் பழம் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு அபாயம் குறைகிறது. ரம்பூட்டான் பழமானது ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த செய்கிறது. கண் ஆரோக்கியத்துக்கும் பெரிதும் உதவுகிறது.
ரம்பூட்டான் பழம் அடிக்கடி சாப்பிடுவதால் தலைமுடி, தோல் மற்றும் கை, கால் நகங்கள் ஆகியவை பளபளப்புடன் இருக்க உதவி செய்கிறது.
நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், நாக்கு வறண்டு போவதை உடனடியாக நிவர்த்தி செய்கிறது. எனவே, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஏற்ற பழமாகவும் ரம்பூட்டான் திகழ்கிறது.