யாரெல்லாம் இஞ்சியை உணவில் எடுத்துக் கொள்ளக் கூடாது

#ஆரோக்கியம் #மூலிகை #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #herbs #Antoni #Theva #Antoni Thevaraj
யாரெல்லாம் இஞ்சியை உணவில் எடுத்துக் கொள்ளக் கூடாது

ஏந்த உணவாகினும் சமிபாடடைய நாம் இஞ்சி சேர்ப்பது வழக்கம். இஞ்சி உடலுக்கு நம்மை தரக்கூடிய சிறந்த ஒரு மூலிகை என்றாலும் அதனை எல்லோரும் எடுத்துக்கொள்ளலாம் என்றில்லை. அதனை தவிர்க்க வேண்டியவர்களும் உள்ளனர்.

யாரெல்லாம் இஞ்சியை தவிர்க்க வேண்டுமென்று இன்றைய பதிவில் நாம் பாா்ப்போம்.

இஞ்சியை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்

ஒரு நாளைக்கு 4 கிராம் அளவு மட்டுமே இஞ்சியை சாப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். அது தான் நம்முடைய உடம்பிற்கு ஏற்ற இஞ்சியின் அளவு என்று சொல்லப்படுகிறது.

தினமும் நாம் சாப்பிடும் உணவில் இஞ்சியை அதிகமாக சாப்பிட்டால் வயிறு வீக்கம், வயிறு கோளாறு, இதய பகுதிகளில் பிரச்சனை போன்றவை வர வாய்ப்பு இருக்கிறது.

இஞ்சியை யார் எல்லாம் எடுக்கக் கூடாது:

கர்ப்பிணி பெண்கள்:

இஞ்சியில் செரிமானத்திற்கு தேவையான அதிகமாக சத்துக்கள் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இஞ்சியை சாப்பிட கூடாது. ஏனென்றால் இஞ்சி கர்ப்பிணி பெண்களின் வயிறு சுருக்கம் மற்றும் குறை பிரசவம் போனவற்றைக்கு வழிவகுக்கிறது. அதனால் கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனை படி சாப்பாட்டில் இஞ்சி சேர்த்து கொள்ள வேண்டும்.

பித்தப்பை கல்:

பித்தப்பையில் கல் உள்ளவர்கள் இஞ்சி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் பித்தப்பையில் நீர் சுரக்க வைப்பதற்கு இஞ்சி முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதனால் பித்தப்பையில் கல் உள்ளவர்கள் இஞ்சி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.

அல்சர் உள்ளவர்கள்:

அல்சர் உள்ளவர்கள் இஞ்சியை பேஸ்ட் போல நன்றாக அரைத்து தான் சாப்பாட்டில் எடுத்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் இஞ்சி அல்சர் உள்ளவரின் குடலிற்கு சென்று அடைப்பை ஏற்படுத்துகிறது.

அறுவை சிகிச்சை:

அறுவை சிகிச்சை செய்ய உள்ளவர்கள் இஞ்சி சாப்பிட கூடாது. ஏனென்றால் அவர்களுக்கு அறுவை சிகிச்சையின் போது இரத்த போக்கு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

உடல் எடை குறைவு:

உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இஞ்சி சாப்பிடும் போது வயிற்றில் செரிமானத்திற்கு தேவையான ஹார்மோன்கள் உருவாகிறது நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டை எளிதில் செரிமானம் செய்து வயிற்றில் ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இஞ்சி சாப்பிட கூடாது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!