நமது கண்களிலிருந்து வரும் கண்ணீரால் கண் மற்றும் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்.

#ஆரோக்கியம் #கண்ணீர் #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #tears #Antoni #Theva #Antoni Thevaraj
நமது கண்களிலிருந்து வரும் கண்ணீரால் கண் மற்றும் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்.

நமக்கு இன்பம் மற்றும் துன்பம் வரும் போது ஆனந்தம், அழுகை வருவது இயற்கை. இவ்வாறு ஏற்படும் போது கண்களில் நீர் வடிவதுண்டு. இதனை கண்ணீர் என்போம். இன்று நாம் பார்க்கப்போவது இந்தக் கண்ணீரினால் ஏற்படும் நன்மைகளையே.

கண்ணீர்

எப்போதும் நாம் அழுகை வந்தால் மனம் விட்டு அழுது விட வேண்டும். அழுகையை கட்டுபடுத்தி வைக்க கூடாது. சோகமாக இருக்கும் தருணத்தில் அழும்போது நம்முடைய கண்களில் இருந்தும் கண்ணீர் வெளிவரும்.

தூசியை வெளியேற்றுகிறது:

கண்ணீரால் கண்ணுக்குள் இருக்கும் தூசி, அசுத்தமான பொருட்கள் அனைத்தும் வெளியே வந்து விடும். அதுபோல வெங்காயம் உரிக்கும் போதும் வரும் கண்ணீரிலும் கண்களில் உள்ள தூசுகள் மறைந்து விடும்.

கண் பார்வை அதிகரிக்க:

நாம் அழுகும் போது கண்களில் புரை ஏற்படாமல் தடுக்க முடியும். அதுமட்டும் இல்லாமல் கண்ணை வறட்சி அடையாளம் இருக்க வைக்கிறது.

மன அழுத்தம் குறைய:

கண்ணீர் விட்டு அழுதால் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் சுரக்கிறது. அதனால் மன அழுத்தம், சோகம், வருத்தம் இவற்றில் இருந்து எளிதாக விடுபட முடியும்.

மூக்கு அடைப்பு சரிசெய்ய:

நாம் அழும் போது முகத்தில் உள்ள தசைகள் விரிவடைந்து மூக்கு துவாரத்தில் உள்ள சளி, மற்ற திரவங்கள் எதுவாக இருந்தாலும் அதனை வெளியேற்றுகிறது.

சளி மற்றும் இருமல்:

கண்களில் இருந்தும் வரும் கண்ணீரினால் சளி மற்றும் இருமல் வர காரணமாக இருக்கும் வேதிப்பொருட்களை வெளியேற்றுகிறது. ஆகவே கண்களில் இருந்தும் வரும் கண்ணீரை ஒரு போதும் கட்டுப்படுத்தி வைக்காதீர்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!