இளநீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?
வெயில் காலத்தில் இளநீர் தவிர்க்க முடியாத தேவை. அது வெயிலின் வெப்பத்தைத் தனிக்கக் கூடிய இயற்கை நீர். ”வெயில் காலத்தில் உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்ஸ் நீர்சத்து மூலமாக வெளியேறுகிறது. அதை மீண்டும் உடலுக்கு அளிக்க இளநீர்தான் சரியான உதவுகிறது. உடலுக்குத் தேவையான பொட்டாசியம் , சோடியம், கால்சியம் போன்ற மிரல்ஸ் மூலமாக எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்கின்றன “ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிரீத்தி ராஜ். இவர் வூட்டு நியூட்ரீஷியன் கிளீனிக்கின் நிறுவனர் மற்றும் மருத்துவராக இருக்கிறார்.
வைட்டமின்கள், உடல் எடையைக் குறைக்கக்கூடிய ஆற்றல் சத்துகள் போன்றவை அதிகமாக இருக்கின்றன.
தினமும் வெந்நீரில் சிறிது இளநீர் கலந்து முகத்தை அலசினால் போதும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போன்றவை மறைந்து முகம் பொலிவு பெறும்.
கோடையில் ஏற்படும் சிறுநீர் கடுப்பைப் போக்க தினமும் இரண்டு இளநீர் குடித்து வந்தால் சிறுநீர் தாராளமாகப் போகும்.
குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். தினமும் இளநீர் குடித்தால் உடல் சூடு தணியும். சோர்வு நீங்கும். வயிற்றுப்புண் ஆறும். தாகத்தை தணிக்கும்.