உடல் உறுப்புக்களில் தோன்றும் மாற்றங்களைக் கொண்டு நோயை அறியும் முறை.
நமது உடல் உறுப்புக்களில் ஏதும் மாற்றம் ஏற்பட்டால் நமது உடல் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். அதனையே மருத்துவர்களும் அவதானித்து கண்டுபிடிக்கிறார்கள். உதாரணமாக நீங்கள் காய்ச்சல் என்று மருத்துவரை அணுகினால் நாக்கின் தன்மையை பார்ப்பார்கள். அவ்வாறு உடலின் உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோய்களை நாம் கண்டறியலாம் எப்படி என்று இன்று பார்ப்போம்.
முகம் வீங்கி இருந்தால்:
உடலில் தண்ணீர் சத்து குறைவாக இருந்தால் முகம் வீக்கமாக இருக்கும். தண்ணீர் சத்து குறைவாக இருந்தால் இரத்த செல்கள் விரிவடைந்து முகத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனை அறிந்து தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
கண்களில் தோன்றும் அறிகுறிகள்:
கண்கள் வீக்கமாக இருந்தால் சிறுநீரகங்கள் மோசமாக இருக்கிறது என்று அர்த்தம். சிறுநீரகங்கள் அதன் வேலையை சரிவர செயற்படுத்தவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேறாது. அந்த நேரத்தில் கண்களில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
அதுபோல உடலில் மக்னீசியம் சத்து குறைவாக இருந்தால் கண் இமைகளில் வலி ஏற்படும்.
தோலில் தடிப்புகள் ஏற்பட்டால்:
தோலில் தடிப்புகள் ஏற்பட்டால் இருதயம் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். உதாரணமாக காதுகளுக்கு பக்கத்தில் இருக்கும் தோல் தடிப்பாக இருந்தால் இருதய கோளாறு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
தோலின் நிறம் மஞ்சளாக இருந்தால்:
தோல் இளம் மஞ்சள் நிறமாக இருந்தால் கல்லீரலில் பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். கல்லீரல் பாதிப்படையும் போது நம் உடலில் இருக்கும் பித்த நீர் வெளியேறாமல் இருக்கும். இதனால் தான் தோல் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
பாதம் மரத்துப் போதல்
பாதம் அடிக்கடி மரத்து போனால் நீரிழிவு நோயின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதாவது, நீரிழிவு நோயானது இரத்தத்தில் இருக்கும் செல்களை பாதிப்பது மட்டுமில்லாமல், நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுக்கிறது. இதன் காரணமாக தான் பாதம் சில நேரங்களில் மரத்துப் போகிறது.
பாதங்களில் வெடிப்பு ஏற்படுதல்:
பாதங்களில் வெடிப்புகள் இருந்தால் அது தைராய்டு பிரச்சனையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தைராய்டு சுரப்பியானது அதன் வேலையை சரியாக செய்யாமல் இருக்கும் போது பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. இதை வைத்து தைராய்டு பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
உள்ளங்கை சிவப்பாக இருந்தால்:
உள்ளங்கை சிவப்பாக இருந்தால் கல்லீரலில் ஏதும் பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். கல்லீரல் பாதிப்பு அடைந்தால் நம் இரத்தத்தில் இருக்கும் ஹார்மோனை அதனால் கட்டுப்படுத்த முடியாது. அந்த நேரத்தில் நம் உடலில் இருக்கும் இரத்தமானது அதிக சிவப்பு நிறமாக மாறிவிடும்.
அதுபோல உள்ளங்கையின் தோல் மிருதுவாக இருப்பதால் உள்ளங்கை சிவப்பு நிறத்தை வெளிக்காட்டும். இதை வைத்து கல்லீரலில் பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.