செம்பருத்திப் பூவின் நன்மைகள்

#Health #World_Health_Organization #Healthy #Health Department
Mani
1 year ago
செம்பருத்திப் பூவின் நன்மைகள்

செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும். செம்பருத்திப்பூக்கள் வெறும் இதய நோய் என்றில்லாமல், அவர்களுக்கு வரக்கூடிய படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு என்று அத்தனை பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் தரக்கூடியது.

செம்பருத்தி பூ, உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாகும்.

செம்பருத்தி பூவின் இதழ்களை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.

உடற்சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 5 அல்லது 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

செம்பருத்திப்பூக்களை சிகைக்காய்ப் பொடியுடன் சேர்த்துப் பயன்படுத்துவதால் பொடுகு, முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்னைகள் சரியாகும்.

கொழுப்பின் அளவினை குறைப்பதில் சக்தி வாய்ந்தது. தமனிகளின் அடைப்புகளை நீக்குவதன் மூலம், கொழுப்பின் அளவை குறைக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நிச்சயமாக பயன்படுத்த வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!